உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே வாரத்தில் 2வது முறையாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தலைநகரில் பரபரப்பு

ஒரே வாரத்தில் 2வது முறையாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தலைநகரில் பரபரப்பு

புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஒரே வாரத்தில் 2வது முறையாக பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகள், விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்து விட்டது. சோதனையின் முடிவில் இது புரளி என்று தெரிய வந்தாலும், இதனால் ஏற்படும் பதற்றம் பொதுமக்களையும், அதிகாரிகளையும் அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது. எனவே, இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் ஓய்ந்த பாடில்லை. கடந்த 9ம் தேதி தலைநகர் டில்லியில் உள்ள 40 பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது புரளி என தெரிய வந்தது.இந்த நிலையில், இந்த வாரத்தில் 2வது முறையாக இன்றும் டில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கைலாஷில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி, சல்வான் பள்ளி, மாடர்ன் பள்ளி மற்றும் கேம்ப்ரிட்ஜ் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு புரளி சம்பவத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ