உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஸ்வேஸ்வரய்யா மியூசியத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விஸ்வேஸ்வரய்யா மியூசியத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூரின் பிரசித்தி பெற்ற, விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.சமீப நாட்களாக, பெங்களூரில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அதிகரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, பெங்களூரில் 45க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது விஷமிகளின் பார்வை, அருங்காட்சியகம் மீது பதிந்துள்ளது.பெங்களூரின், கஸ்துாரி பா சாலையில் உள்ள விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்துக்கு அதிகாரிகள் வழக்கம் போன்று, நேற்று காலை 9:00 மணியளவில் வந்தனர். இ - மெயிலை ஆய்வு செய்தனர்.அப்போது அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ - மெயில் ஒன்றில் கூறப்பட்டிருந்தது. 'அருங்காட்சியகத்துக்குள் வெடிகுண்டு வைத்துள்ளோம். அவற்றை ரகசிய இடங்களில் வைத்துள்ளோம். காலையில் வெடிக்கும். அருங்காட்சியகத்தில் உள்ள அனைவரும் உயிரிழப்பர்' என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சேர்ந்து, அருங்காட்சியத்தில் ஒரு இடம் விடாமல் சோதனையிட்டனர்.எந்த வெடிகுண்டும் தென்படவில்லை. அது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்த பின், அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை