மேலும் செய்திகள்
காயமடைந்தோரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
1 hour(s) ago
ரூ.4.94 கோடி மோசடி மகன் மீது தந்தை புகார்
1 hour(s) ago
காஷ்மீரில் 300 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை
2 hour(s) ago | 1
புதுடில்லி: சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'இண்டிகோ' விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், 'சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு நேற்று சென்ற, 'ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்' விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வாரணாசி விமான நிலையத்துக்கு, இ - மெயிலில் வந்த இந்த மிரட்டலில், விமானத்தில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து நடுவானில் விமானம் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணியர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago | 1