எல்லையில் ஊடுருவல்: ராணுவம் முறியடிப்பு
பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் நேற்றிரவு திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நம் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சண்டை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நம் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி செல்வதற்கு உதவி செய்யும் வகையில் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரம் எல்லைப் பகுதியில் உஷாராக இருந்த நம் ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததால், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் இந்த அத்துமீறலில் ஈடுபட்டது.