உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை; குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் எரித்துக்கொலை; குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: பெங்களூருவில் ரூ.5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரகெரே பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் நிஷ்சித். இவர் கடந்த 30ம் தேதி டியூசனில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அச்சுதா, ஹூலிமாவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை பன்னீர்ஹட்டா - கோட்டிகெர் சாலையில் எரிந்த நிலையில், சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். சிறுவனின் வீட்டில் பகுதிநேர ஓட்டுநராக பணியாற்றி வந்த குருமூர்த்தி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தான் இந்த செயலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்கச் சென்ற போது, தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, இருவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், காலில் காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 01, 2025 12:08

அவர்கள்தான் சிறுவனை கருணையின்று கொன்று எரித்தார்கள் என்று தெரிந்தபின்பும், அவர்களை ஏன் காலில் சுட்டு பிடிக்கவேண்டும்? மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு சிறையில் சோறுபோட்டு வளர்க்கவா? அங்கேயே நெஞ்சில் சுட்டுக்கொன்றிருக்கவேண்டும் அல்லவா? இப்பொழுது என்ன ஆகும்? அந்த கொடூரன்களுக்கு வாதாட ஒரு சில பணவெறி பிடித்த வக்கீல்கள் ஆஜராவாவர்கள். சட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டைகளையும் அலசி வாதாடி அவர்களை காப்பாற்றிவிட்டு, அவர்களிடம் பணத்தை பெற்றுச்செல்வார்கள்... வேறொரு குற்றவாளியை இதே போல காப்பாற்ற. வயிற்றெரிச்சல் நமது நீதித்துறை.


K V Ramadoss
ஆக 01, 2025 13:59

காலில் சுட்டு பிடித்ததில் தவறில்லை ஆனால் அவர்களை காவலில் வைத்து சித்திரவதை செய்யவேண்டும். பல்லில்லாத நீதித்துறை அனுமதிக்குமா ?


Jack
ஆக 02, 2025 08:36

தெய்வம் நின்று கொல்லும்


p karuppaiah
ஆக 01, 2025 11:36

காவல் துறை அதிகாரிகளுக்கு சுட்டு பிடிக்காதீர்ககள் சுட்டு கொள்ளுங்கள் please


V RAMASWAMY
ஆக 01, 2025 10:40

உடன் விசாரணை செய்து அவர்கள் தான் செய்தது என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதி தீவிர தண்டனை கொடுக்கவேண்டியது அத்தியாவசியம். இதில் மெத்தனமோ காலதாமதமோ இருந்தால், அதனால் குற்றங்கள் அதிகமாகுமே தவிர குறையாது.


Anantharaman Srinivasan
ஆக 01, 2025 10:28

அந்தோ பரிதாபம். குற்றவாளிகளை சுட்டுப்பிடித்து என்ன பிரியோஜனம். போன சிறுவன் உயிர் மீண்டுவருமா..? வீட்டுக்கு வைக்கும் வேலையாட்களை டிடக்டிவ் ஏஜென்சிஸ் மூலம் வைப்பது நல்லது.


Senthoora
ஆக 01, 2025 11:39

அப்போ குற்றவாளியை பிடிக்காமல், மீண்டும் உங்க வீட்டில் யாரையும் கடத்த சொல்லுவோமா?


Natchimuthu Chithiraisamy
ஆக 01, 2025 10:02

பணம் கொடுத்து கொலை செய்தவன் எவன் என்று கண்டுபிடிக்க யாரும் விரும்புவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை