உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பகத்தில் மோதல் சிறுவன் அடித்துக் கொலை

காப்பகத்தில் மோதல் சிறுவன் அடித்துக் கொலை

புதுடில்லி:கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன், காப்பகத்தில் சக கைதிகளுடன் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்டான். வடக்கு டில்லி மஜ்னு கா திலா காப்பகத்தில், வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சி வழக்கில் ஹவுஸ் காஸ் போலீசார் கைது செய்த, 14 வயது சிறுவன், இந்தக் காப்பகத்தில் அடைக்கப்பட்டு இருந்தான்.காப்பகத்தின் துணி துவைக்கும் பகுதியில் குளிப்பது தொடர்பாக, இங்கு அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு இடையே நேற்று முன் தினம் காலை தகராறு ஏற்பட்டது. இருவர் சேர்ந்து, ஒரு சிறுவனை சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த சிறுவன் மயங்கிச் சரிந்தான். காப்பக போலீசார், ஹிந்து ராவ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.இந்தக் கொலை தொடர்பாக, காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இரு சிறுவர்கள் மீது, முண்ட்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவன் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ