மேலும் செய்திகள்
நகை கடையில் கைவரிசை: 6 பேர் கைது
20-Aug-2025
புதுடில்லி:பிண்டாபூர் அருகே, நண்பன் உதவியுடன் சொந்த வீட்டிலேயே நகை திருடிய சிறுவன், போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன. பிண்டாபூர் என்ற பகுதியில் இருந்து, கடந்த மாதம் 26ம் தேதி போலீசாருக்கு வந்த தகவலின் படி, வீடு ஒன்றில் மர்ம நபர்கள் நகையை திருடியதாக கூறப்பட்டது. அந்த நுாதன கொள்ளையை விசாரிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வெளியே இருந்து யாரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதி செய்தனர். வீட்டின் உள்ளே இருக்கும் நபர்கள் தான் நகைகளை திருடியிருக்கக் கூடும் என நம்பினர். அதையடுத்து, அந்த சிறுவனின் தந்தையை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதை அறிந்த அந்த சிறுவன், நகை திருட்டை ஒப்புக் கொண்டார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வீட்டில் உள்ள, 17 வயது சிறுவன், பிளஸ் 1 முடித்து, தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஜிஷான், 22, என்ற தன் நண்பருடன் இணைந்து, நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். அதையடுத்து, இருவரால் திருடப்பட்ட தங்க சங்கிலி, இரண்டு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வளையல், இரண்டு மோதிரங்கள், ஐந்து வெள்ளி சங்கிலிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த சிறுவன், சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும், 22 வயது நபரை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
20-Aug-2025