உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் மோதி சிறுவன் பலி

ரயில் மோதி சிறுவன் பலி

குருகிராம்: காதில், ‘இயர் போன்’ அணிந்து பாடல் கேட்டபடியே தண்டவாளத்தை கடந்த, 17 வயது சிறுவன் ரயில் மோதி உயிரிழந்தான். மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், சாப்ரா என்ற ஊரை சேர்ந்தவர் தேஸ்ராஜ் ராஜ்புத், 17. ஹரியானா மாநிலம், குருகிராம் 80வது செக்டாரில் வசிக்கும் தன் தாய்மாமா வீட்டில் தங்கி, தோட்ட வேலை செய்து வந்தான். நேற்று முன் தினம் காலை, 8:00 மணிக்கு காதில், ‘இயர் போன்’ அணிந்து, பாடல் கேட்டபடியே தண்டவாளத்தை கடந்து சென்றான். அப்போது, அதிவேகமாக வந்த, டில்லி – ரேவாரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, தேஸ்ராஜ் துக்கி வீசப்பட்டான். உடல் சிதறி அதே இடத்திலேயே உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார், சிதைந்த நிலையில் கிடந்த தேஸ்ராஜ் உடலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ