சூடான சாம்பார் கொட்டியதில் சிறுவன் பலி
தாவணகெரே : சூடான சாம்பார், 4 வயது சிறுவன் மீது கொட்டியதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று உயிரிழந்தார்.தாவணகெரே மாவட்டம் ஜகலுாரின் கோலரஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரின் மகன் மிதுன், 4. செப்., 15ம் தேதி, தாயார் சுடச்சுட சாம்பாரை, டேபிள் மேல் வைத்திருந்தார்.சிறுவன் மிதுன், சாம்பார் பாத்திரத்தை பிடித்து இழுத்துள்ளார். மிதுனின் தலை, மார்பு, கால்கள் முழுதும் சாம்பார் கொட்டியது. குழந்தையின் அலறலை கேட்ட பெற்றோர், சிறுவனை, நகரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். செப்., 26ல் ஹுப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார்.