மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
புதுடில்லி: மேற்கு டில்லியின் விகாஸ்புரி பகுதியில், குழந்தைகள் ஒளிந்து விளையாடிய போதுனா டிரான்ஸ்பார்மருக்கு பின்னால் சென்று ஒளிந்த, 10 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். விகாஸ்புரி, இந்திரா கேம்ப் பகுதியில் நேற்று முன் தினம் இரவு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சில சிறுவர்கள், ஒளிந்து கண்டுபடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மரின் பின்னால் சென்று, 10 வயது சிறுவன் ஒளிந்தான். டிரான்ஸ்பார்மரில் இருந்த ஒயரை சிறுவன் பிடித்த போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மின் துறையினர், அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து, சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.