உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டப்பகலில் சிறுவன் கொலை

பட்டப்பகலில் சிறுவன் கொலை

புதுடில்லி:வடக்கு டில்லியின் புராரியில், பட்டப்பகலில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.புராரி காந்தி சவுக், பிங்கி காலனி அருகே நேற்று முன் தினம், 2:30 மணிக்கு, 16 வயது சிறுவனின் மார்பில் சிலர் கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பலாஸ்வா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்தான்.தன் நண்பருடன் சிறுவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காந்தி சவுக் அருகே இருவர் வழிமறித்து சிறுவன் மார்பில் பலமுறை கத்தியால் குத்திவிட்டு தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி