உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைகளை இழந்த சிறுவன் மின் அதிகாரிகள் மீது வழக்கு

கைகளை இழந்த சிறுவன் மின் அதிகாரிகள் மீது வழக்கு

நொய்டா:ஏழு வயது சிறுவன் இரு கைகளையும் இழந்த சம்பவம் நடந்து, இரண்டு மாதங்களுக்குப் பின், உத்தர பிரதேச மின் கழக லிமிடெட், நான்கு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நொய்டா அருகே அச்சேஜா புஜுர்க் கிராமத்தில் வசிப்பவர் நவுஷாத் அலி. இவரது மகன் தைமூர்,7. மே 22ம் தேதி வீட்டு மாடியில் விளையாடிய போது, தொங்கும் 11,000 வோல்ட் மின் ஒயரைத் தொட்டு துாக்கி வீசப்பட்டான். டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு, இரு கைகளும் முழங்கையில் இருந்து அகற்றப்பட்டன.இதுகுறித்து, நவுஷாத் அலி கொடுத்த புகார்படி, தன்கவுர் போலீசார், உத்தர பிரதேச மின்கழகத்தின், நான்கு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை