உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா கையில் பிரம்மாஸ்திரம்; சிந்து நதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு நோட்டீஸ்

இந்தியா கையில் பிரம்மாஸ்திரம்; சிந்து நதி ஒப்பந்தம் மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா, முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இரு நாடுகளுக்கும் சொத்துக்கள் பொதுவாக பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஆனால் நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. உலக வங்கி மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்புக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் மொத்த நீர் வளத்தில் 80 சதவீதம் பாகிஸ்தானுக்கும், 20 சதவீதம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்பது நீண்ட கால குறைபாடாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (IWT) பிரிவு XII (3) இன் கீழ் இந்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.சிந்து நதி ஒப்பந்தம் செப்டம்பர் 19, 1960 இல் கையெழுத்தானது. சிந்து நதி என்பது, இந்தியாவுக்குள் பாயும் மூன்று நதிகள் (ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் மற்றும் அவற்றின் துணை நதிகள்) மற்றும் பாகிஸ்தானுக்குள் பாயும் மூன்று நதிகள் (சிந்து, ஜீலம் மற்றும் செனாப் மற்றும் அவற்றின் துணை நதிகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது.ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர்வளத்தில் 20% இந்தியா கட்டுப்பாட்டில் உள்ளது; அதே நேரத்தில் பாகிஸ்தான் 80% பெறுகிறது.இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள், நாட்டின் பெரிய அளவு, மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தண்ணீர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் நியாயமற்றது என்று கூறுகின்றனர்.சில ஆய்வாளர்கள் இந்த ஒப்பந்தம் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு தான் நன்மையை அளிக்கிறது என்றும் கூறுகின்றனர்.இந்நிலையில் தான் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.''கிஷன்கங்கா மற்றும் ரட்லே ஹைட்ரோ திட்டங்கள் தொடர்பாக நீடித்த சர்ச்சை,தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தாக்கமும் மறுபரிசீலனை கோருவதற்கான காரணங்களில் ஒன்று,' என இந்தியா குறிப்பிட்டுள்ளது.இந்தியாவுக்கு சர்வதேச அரங்கிலும், எல்லையிலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவதற்காக இந்தியா கையில் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் இது என்று கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மாயவரத்தான்
செப் 19, 2024 15:08

கட்டுரையில் நதிநீர் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, நதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாய்கிறதா, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்கு வருகிறதா என்பதைப் பற்றிய விவரங்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது.


sampath kumar
செப் 19, 2024 13:53

காங்கிரஸ் ஆண்டபோது நேரு அவர்களால் போடப்பட்ட நய வஞ்சக ஒப்பந்தம்.எதிர் அணியினர் கேள்வி கேட்காத வண்ணம் சரி கட்டி இந்தியர்களுக்கு துரோகம் இழைக்க எப்படி மனம் வந்தது என தெரியவில்லை.


sampath kumar
செப் 19, 2024 13:48

நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம்.இந்திய விவசாயிகளுக்கு செய்த துரோகம்.ஆனால் அப்போது எதிர் கட்சியாக இருந்தவர்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஒருவர்.ஆனால் யாரும் ஆட்சேபிக்க வில்லை.மிக சாமர்த்தியமாக இந்திய விவசாயிகளுக்கு வைத்த ஆப்பு.


T.Gajendran
செப் 19, 2024 13:30

நல்ல செய்தி, 140, கோடி மக்கள் தொகைகொண்ட, நம் நாட்டுக்கு, வெறும் 20%, தண்ணீர் என்பது, மிகவும் குறைவு, 50-50, என்பதே, சரியானா தீர்வு, நமது பாரதத்தின், கோரிக்கை, இப்படி இருந்தால், நன்று, பாகிஷ்தானை, கேள்வி கேக்கும், பாரதம், அதே வழிமுறையை, பயன்படுத்தி, காவேரி பங்கீட்டிலும், சரியான முறையில், நடந்துகொண்டு, இரு மாநில மக்களின், நலனில் அக்கறை காட்டவேண்டும், ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, வீட்டுக்கு,தநா- கநா இரண்டாங்கம், செய்யகூடாது??


ராமகிருஷ்ணன்
செப் 19, 2024 05:59

மற்ற பொருட்களின் பிரிவினை எப்படி நடந்ததோ அதே அளவு தண்ணீர் பிரிக்க பட்டிருக்க வேண்டும் அப்போதைய காங்கிரஸ் அரசின் நயவஞ்சகமான முஸ்லிம் சார்பு நிலையை அப்போதைய எதிர் கட்சிகள் தடுக்கவில்லையா.


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 21:19

நதிகளை இந்தியா பக்கம் திருப்பிவிட படும்.


Yaro Oruvan
செப் 18, 2024 21:17

ஒப்பந்தம் போட்டது 1960ல ... அப்ப மோடிதான பிரதமரா இருந்தார் உப்பிஸ் ?? கான்+கிராஸ் காரன்கிட்ட கேட்டாலும் அப்போ மோடிதான் பேரதமரு அவரு செஞ்ச தப்பும்பான்


Ramarajpd
செப் 18, 2024 19:53

நீர்வழி சரக்கு போக்குவரத்து உருவாக்க வேண்டும். நிறைய நாடுகளில் உள்ளது.


GMM
செப் 18, 2024 19:03

ஒப்பந்தம் 1960 என்றால் காங்கிரஸ் கைகாரியம் தான். சிந்து நதி நீரை 1 பங்கு இந்தியா 4 பங்கு பாகிஸ்தான் பிரிவினை கோஷ்டிக்கு சமசீர் ஒப்பந்தம் போட நேரு /ராகுலால் ,மட்டும் முடியும்.? முதலில் நதி நீர் இணைப்பு , சேமிப்புக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் . மாநில , மத்திய பட்ஜெட்டில் 10 சதம் நிதி ஒதுக்கி செயல் திட்டம் வகுக்க வேண்டும். வங்க தேஷ் பக்கமும் உள்ள நதி இந்திய கடலோரம் குமரி வரை திருப்ப வேண்டும். பிஜேபி யின் தேச நல நடவடிக்கை.


Venkatesan
செப் 18, 2024 18:47

Right decision. Water should be utilized by our country.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை