பிராமண சபை ஓணம் கொண்டாட்டம்
பாலக்காடு; கேரள பிராமண சபை கல்பாத்தி உபசபை மகளிர் பிரிவு சார்பில், ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி ராமர் தியான மடத்தில், கேரளா பிராமண சபை கல்பாத்தி உபசபை மகளிர் பிரிவு சார்பில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சிகளை கேரளா பிராமண சபை கல்பாத்தி உபசபை செயலாளர் சந்தானகோபால் துவக்கி வைத்தார். தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். மகளிர் பிரிவு தலைவர் கீதா கோபால், செயலாளர் லலிதா கணேசன், பொருளாளர் சியாமளா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பூக்கோலம் அமைத்தல், சிறுவர்களுக்கான வினாடி-வினா போட்டி, கீதை பாடுதல், பக்தி பாடல் நடனங்கள், ஓணம் பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பங்கு கொண்ட சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அனைவருக்கும் ஓண பாயாசம் வழங்கப்பட்டது.