உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பித்தளை மரம், வெள்ளிப் பானை, ஓவியங்கள்: ஜி7 தலைவர்களுக்குப் மோடியின் அன்பு பரிசுகள்; வெளியான சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

பித்தளை மரம், வெள்ளிப் பானை, ஓவியங்கள்: ஜி7 தலைவர்களுக்குப் மோடியின் அன்பு பரிசுகள்; வெளியான சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் பித்தளை மரம், வெள்ளி பானை, ஓவியங்கள் உள்ளிட்டவற்றை ஜி 7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கி உள்ளார்.கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலகத் தலைவர்களுக்கு வழங்கிய பரிசுகள் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு கலை மற்றும் கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:

பித்தளை மரம்

கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பித்தளை போதி மரத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்த போதிமரம் அமைதி மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது.

நந்தி சிற்பம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு டோக்ரா நந்தி சிற்பத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பண்டைய கால மெழுகு நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த சிற்பம், கலைத்திறனை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

வார்லி ஓவியம்

மெக்சிகன் அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோவுக்கு பாரம்பரிய வார்லி ஓவியத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் இந்த வார்லி ஓவியத்தை வரைந்து உள்ளனர். விவசாயம், நடனம் மற்றும் கொண்டாட்டங்கள் போன்ற காட்சிகளைக் கொண்டுள்ளது. இது சமூகம் மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகிறது.

மதுபானி ஓவியம்

தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு பிரதமர் ஒரு பாரம்பரிய மதுபானி ஓவியத்தை பரிசளித்தார். இந்தியாவின் பீஹாரில் இருந்து தோன்றிய மதுபானி கலை ஓவியங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கிறது.

பித்தளை குதிரை

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு சத்தீஸ்கரிலிருந்து கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட பித்தளை டோக்ரா குதிரையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பழங்குடி கைவினைஞர்களால் பண்டைய கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பித்தளை குதிரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூங்கில் படகு

பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வாவுக்கு, அன்னம் சிலையுடன் கூடிய கைவினைப் பிரம்பு மற்றும் மூங்கில் படகை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மேகாலயாவின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கிறது.

வெள்ளிப்பானை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு மோடி கோலாபுரி வெள்ளிப் பானையை பரிசாக வழங்கினார். மஹாராஷ்டிராவின் இந்த பாரம்பரிய பானை அழகு மற்றும் சடங்கு பாரம்பரியம் ஆகிய இரண்டையும் குறிக்கிறது. தூய வெள்ளியில் கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கோனார்க் சக்கரத்தின் மணற்கல்

ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸுக்கு பிரதமர் மோடி கோனார்க் சக்கரத்தின் மணற்கல் பிரதியை பரிசளித்தார். ஒடிசாவில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த மணற்கல் 13ம் நூற்றாண்டின் சூரிய கோவிலின் சின்னமான சக்கரத்தை பிரதிபலிக்கிறது. இது காலத்தையும், பிரபஞ்சத்தையும் குறிக்கிறது.

வெள்ளி பர்ஸ்

கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமனுக்கு பிரதமர் மோடி வெள்ளி பர்ஸை பரிசளித்தார். இந்த பர்ஸ் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஆண்டுகள் பழமையான தாரகாசி கலையை காட்சிப்படுத்துகிறது.

கருங்காலி மரப்பெட்டி

ஆல்பர்ட்டாவின் பிரதமர் டேனியல் ஸ்மித்துக்கு, பிரதமர் மோடி கருங்காலி மரப்பெட்டியை பரிசாக வழங்கினார். ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்ட பெட்டியில், பண்டைய காலத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
ஜூன் 19, 2025 22:02

படம் ரொம்ப சூப்பர்... படத்தை பார்த்து கதை சொல்லுவது போல் இருக்கிறது...


SANKAR
ஜூன் 19, 2025 18:06

I am Indian by birth and living in India since birth.myself do not know these handicrafts exist!this will be curiously examined in those countries and may result even in export orders!!


புதிய வீடியோ