உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு அப்பவே தெரியும்; எல்லாம் காங்கிரஸ் செய்த சதி; மவுனம் கலைத்தார் பிரிஜ் பூஷன்!

எனக்கு அப்பவே தெரியும்; எல்லாம் காங்கிரஸ் செய்த சதி; மவுனம் கலைத்தார் பிரிஜ் பூஷன்!

புதுடில்லி: 'தனக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுவதற்கு காங்கிரஸ் தான் காரணம்' என இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, 30. அதே மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத், 30. இவர்கள் இருவரும், வேறு சில வீரர்கள், வீராங்கனைகளுடன் சேர்ந்து, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் புகார் எழுந்த போது, போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பிரிஜ் பூஷன் மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.இந்நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். வினேஷ் காங்கிரஸ் சார்பில் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் சதி!

இது தொடர்பாக, பிரிஜ் பூஷன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த விளையாட்டு வீரர்கள் ஜனவரி 18ம் தேதி ஒரு சதித்திட்டத்தை துவங்கினர். அப்போது இது எல்லாம் ஒரு அரசியல் சதி என்று நான் சொன்னேன். இதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினேன். முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடாவும், அவரது மகன் தீபேந்தர் ஹூடாவும் இதில் ஈடுபட்டுள்ளனர். சதித்திட்டத்துக்கான முழு ஸ்கிரிப்டும் அவர்களால் தான் எழுதப்பட்டது. இது விளையாட்டு வீரர்களின் போராட்டம் அல்ல, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாடகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

தோற்கடித்தேன்!

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் நான் தீபேந்தர் ஹூடாவை தோற்கடித்தேன்.இதுவே என் மீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட முக்கிய காரணம்.ராம ஜென்மபூமி போராட்டத்தின் போது, ​​நான் இரண்டு முறை கைது செய்யப்பட்டேன். இது எல்லாம் அவர்களுக்கு தெரியும். அதனால் தான் என் மீது அவர்கள் திட்டமிட்டு அவதுாறு பரப்பினர்.

கடவுள் தண்டித்தார்!

ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடை பிரிவு போட்டியில் பங்கேற்றது எப்படி என வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி தான் பைனல் வரை சென்றீர்கள். அதற்காக தான் கடவுள் உங்களை தண்டித்துள்ளார்.விளையாட்டு துறையில் ஹரியானா மாநிலம் இந்தியாவின் கிரீடம். எந்த தகுதி அடிப்படையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். மல்யுத்தத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களை நான் கேட்க விரும்புகிறேன்.இவ்வாறு பிரிஜ் பூஷன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
செப் 07, 2024 17:30

அப்பவே தெரியும்னா அப்போவே சொல்றதுக்கென்ன?


Barakat Ali
செப் 07, 2024 17:00

ஆட்சியைப் பிடிப்பதற்காக எதையும் செய்யக்கூடியது காங்கிரஸ் ..... இந்தியாவின் நலனை விரும்பாத ஜார்ஜ் சோரஸ் உடன் கைகோர்த்த காங்கிரஸ் வேறு எதைத்தான் செய்யாது ????


முருகன்
செப் 07, 2024 16:24

நீங்கள் யார் என்று மக்கள் அறிவார்


ஆரூர் ரங்
செப் 07, 2024 16:10

குறிபிட்ட மாநில சாதிக் குழு தங்களைத் தவிர வேறு யாரும் மல்யுத்தம் செய்யக் கூடாது என திட்டம் போட்டு போராட்டம் செய்தது . பிரிஜ் பூஷண் இதற்கு ஒப்புக் கொள்ளாமல் நேர்மையாக நடந்து கொண்டது விநேஷ் போன்ற அநியாயத்தை பிழைப்பாக கொண்ட கூட்டம் ராகுல் உதவியுடன் விளையாட்டிற்கு பங்கம் விளைவிக்கிறது.வரிப்பணத்தில் விளையாடும் இவர்களை தயங்காமல் குண்டாஸ் சில உள்ளே போட வேண்டும்.


Velan Iyengaar
செப் 07, 2024 15:07

யாரேனும் அரசு கொடுத்த பதக்கங்களை எல்லாம் வீசி போராட்டம் நடத்துவார்களா , அரசியல் காரணங்களுக்காக ?? இடத்தை போறத்துக்கு அப்புறம் இந்த முடிவுக்கு வந்தார்கள் ?? ஒட்டுமொத்த மல்யுத்த வீர வீராங்கனைகள் ல்லாம் ஒன்று எர்ந்தல்லவா போராட்டம் நடத்தினார்கள் ?? மனசாட்சி இருக்கா ??


Velan Iyengaar
செப் 07, 2024 14:35

மகா விஷ்ணு சொன்ன மாதிரி பாவம் துரத்தும் ... கர்மா ஒரு பிட்ச் ...சும்மா விடவே விடாது .....


Velan Iyengaar
செப் 07, 2024 14:34

போக்ஸோ சட்டத்தில் இருந்து தப்பியது எப்படி என்று பகிரங்கமா சொல்லு... அப்போவே சொல்லவேண்டியது தானே ?? எதுக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம் வரை ஓடினாய் ?? கைதில் இருந்து தப்ப ஓடி ஒளிந்தாய் ??


Azar Mufeen
செப் 07, 2024 13:08

தரமான கல்வியை கொடுத்த கெஜ்ரிவால் தேசதுரோகி, இவரெல்லாம் புனிதனா, புகழ் பெற்றவர்கள் கொடுத்த புகாருக்கே நடவடிக்கை இல்லை, ஏழைங்க புகார் கொடுத்து நீதி கிடைக்கபோகிறதா?


theruvasagan
செப் 07, 2024 11:50

நாட்டை காட்டிக் கொடுக்க எதிரிகளோடு கைகோர்க்கும் கட்சிக்கு இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.


Lion Drsekar
செப் 07, 2024 11:43

என்னவோ இவர்கள் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்று பதவிக்கு வந்ததுபோல் நினைத்துக்கொண்டு மக்களை மறந்து செயல்படுவது சற்று வருத்தம் அளிக்கிறது , இவர்களது செயல்பாடுகள் அனைத்திலும் நாட்டு மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடி இவர்களுக்கு செலவு, சம்பளம் என ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டும் செல்லும் நிலையில், மக்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே நினைத்து செயல்படுவது நல்லதா என்று அவர்கள் சிந்திக்கவேண்டும், எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் இவர்களுக்காக தீ குளித்து இறந்த பிறகு மீண்டும் இறந்தவர்கள் எதற்க்காக தீ குளித்தார்களோ அதற்க்கு நேர் எதிராக செயல்படுவதால் இவர்களுக்கு மட்டுமே பயன், தொண்டர்கள் ஏமாற்றப்படுகிரார்கள், நாட்டு மக்களுக்கும் அதே நிலைதான் ஆகவே தயவு செய்து , மக்களையும், நாட்டையும் நினைத்து செயல்பட்டால் ஜனநாயகம் விளங்கும், வந்தே மாதரம்


புதிய வீடியோ