உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிஜ்பூஷன் மகன் கான்வாயில் இடம்பெற்ற கார் மோதி இருவர் பலி

பிரிஜ்பூஷன் மகன் கான்வாயில் இடம்பெற்ற கார் மோதி இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பாஜ., எம்.பி., பிரிஜ்பூஷனின் மகனும், வேட்பாளருமான கரன் சென்ற காரின் கான்வாயில் சென்ற கார் , எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ., எம்.பி., பிரிஜ்பூஷன். மல்யுத்த சங்க தலைவராக இருந்தார். அப்போது, பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டில்லியில் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. இந்த குற்றச்சாட்டு காரணமாக தற்போதைய லோக்சபா தேர்தலில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவரது மகன் கரன் வேட்பாளர் ஆக நிறுத்தப்பட்டு உள்ளார்.இந்நிலையில், உ.பி., மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கர்னைல்கஞ்ச் பகுதியில் சென்று கான்வாயில் இடம்பெற்றிருந்த கரனுக்கு சொந்தமான சொகுசு கார் எதிரே வந்த டூவீலர் மீது மோதியது. இதில் 16 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் பிரிஜ் பூஷன் சிங் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. போலீசார், கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது கரன், அந்த காரில் இருந்தாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

இவன்
மே 30, 2024 04:57

அவரு சொந்த கார்ல போகாம கல்வி நிறுவன கார்ல போக போறாரா? இதே டீமுக னா விபத்தே நடக்கல அவனுங்க தலையை கொண்டு வந்து முட்டி கிட்டனுங்க னு சொல்லிருப்பானுங்க


Azar Mufeen
மே 30, 2024 01:50

புகார் கொடுத்து ஒரு வருடம் ஆகியும் இவனை கைது செய்ய வக்கில்லை, இதுல அதிஷியை கைது செய்ய வேண்டுமாம் போங்கடா பிராடு பிஜேபிங்களா


naranam
மே 30, 2024 01:20

இந்த பிரிட்ஜ் பூஷன் மற்றும் அவன் குடுபத்தினராலும் பாஜக்கு என்றுமே கெட்ட பெயர் தான்.


Ramesh Sargam
மே 29, 2024 19:48

நம் நாட்டில் அரசியல்வாதிகள், அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் தவறு செய்தால், குற்றம் புரிந்தால் தண்டிக்கப்படமாட்டார்கள். சட்டம் அவர்களுக்கு சாதகமாக வளைந்துகொடுக்கும். வெட்கம். வேதனை.


Vathsan
மே 29, 2024 19:07

பிரிஜ்ஜிபூஷண் மகன் காரில் இருந்தாலும் இல்லை என்றுதான் முடிப்பார்கள். யோகி மோடி ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம். விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 03:11

கோபாலபுரா குடும்பம் செய்த் செய்யும் ஒன்றும் உங்கள் கண்களுக்கு தெரியாது.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ