உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சிக்கு இந்தியா காட்டிய பாதை: பிரிட்டன் இளவரசர் பாராட்டு

வளர்ச்சிக்கு இந்தியா காட்டிய பாதை: பிரிட்டன் இளவரசர் பாராட்டு

மும்பை:பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் 3 நாள் பயணமாக இந்தியா வந்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்பான எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.இவ்விழாவில் வில்லியம் பேசியதாவது: சுமார் 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 50 மடங்குக்கும் மேல் வளர்ந்துள்ளது. இதனால், புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றானவற்றில் இருந்து 50 சதவீதம் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது.வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்பு வளர்ச்சி, சுற்றுச்சூழல், செழிப்பு அல்லது பாதுகாப்பு என்ற தவறான தேர்வுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், வளர்ச்சியில் இந்தியா வித்தியாசமான பாதையை காட்டி உள்ளது.தவறை சுட்டிக்காட்டுபவர்களால் இனி வரும் காலம் மாறாது. மாறாக, எது சாத்தியம் என்பதை காட்டும் நபர்களால் உலகம் மாறும். இவ்வாறு வில்லியம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 17, 2026 19:54

ஆட்டோ சூப்பரா ஓட்டுரிங்க. கைவசம் தொழில் இருக்கு.


Kalyanaraman
நவ 17, 2026 08:39

ஆக, வாயில் வடை சுடக்கூடாது. நேரடியாக நடவடிக்கை மட்டுமே காலத்தின் தேவை.


GMM
நவ 16, 2026 20:10

சூரிய ஆற்றல் 10 ஆண்டுகளில் 50 மடங்கு. இயற்கையை அழிக்காமல் இயற்கை கொண்டு ஆற்றல் பெற்று வருகிறது நம் நாடு. தவறை சுட்டி காட்டி, வரும் காலத்தை மாற்ற முடியாது. எது சாத்தியம் என்பதை இந்தியா காட்டி வருகிறது. உள்ளத்தில் இருந்து வரும் பாராட்டு. மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல நம் நாடு தகுந்த சட்ட, பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுக்கு வழி காண வேண்டும்.


இந்து
நவ 16, 2026 19:57

இதனை எதிர்(எதிரி) கட்சி கள் உணர மறுப்பது வெட்கக்கேடு.


ManiK
நவ 16, 2026 19:53

இப்படியெல்லாம் இந்தியாவை பாராட்டி பேசக்கூடாது.. மீறி பேசினால் அப்பறம் எங்க நாட்டு இளவரசர் ராகுல்கான்தி இங்கிலாந்து இளவரசரை கண்டபடி பேசி சவால்விடுவார்.


Venkatesan
நவ 16, 2026 19:20

ஏன்னா தல அடிச்சாப்ல இப்புடி பேசிட்டே...


GV Ganesan
நவ 16, 2026 19:16

அடக்கி ஆண்ட தலைமுறை மாறி நாம் பாராட்டு பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை