உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்ணன் என்னடா தம்பி என்னடா: தேஜஸ்வியுடன் தேஜ் பிரதாப் நேருக்கு நேர் மோதல்

அண்ணன் என்னடா தம்பி என்னடா: தேஜஸ்வியுடன் தேஜ் பிரதாப் நேருக்கு நேர் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் நவம்பரில், பீஹார் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது; இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டு மானாலும் வெளியாகலாம். இந்நிலையில், பீஹார் அரசியல் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் பா.ஜ., அமைச்சர் உளறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் எதிர் தரப்பில், குடும்ப விவகாரம் லாலு கட்சியில் பிரச்னையை உண்டாக்கியுள்ளது.பீஹாரில் ஒரு பக்கம் பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமா ரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, இன்னொரு பக்கம் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி உள்ளன. லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்; இவர் மாநில அமைச் சராக பணியாற்றியவர். சமூக ஊடகங்களில், சர்ச்சைக்குரிய பதிவான தன் காதலியின் 12 ஆண்டு உறவு குறித்து வெளியிட்டதால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது இவர், தன் தம்பி தேஜஸ்வி யாதவிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டார். சமீபத்தில், பீஹாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. உடனே, தன் தம்பி தொகுதியான ராககோபூர் சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், 'உங்கள் தொகுதி, எம். எல்.ஏ.,வான என் தம்பி உங்களைப் பார்க்கவோ, உதவி செய்வதற்கோ வரவில்லை. ஆனால், இளைஞர்களுடன் உல்லாசமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார்...' என்றார், தேஜ் பிரதாப். இது, அந்த தொகுதி மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ராககோபூர், ஒரு வி.ஐ.பி., தொகுதி. லாலுவும், அவருடைய மனைவி ராப்ரி தேவியும் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். 2015ம் ஆண்டிலிருந்து இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தேஜஸ்வி யாதவ்.'காங்., - லாலு கூட்டணி வெற்றி பெற்றால் நான் தான் முதல்வர்' என சொல்லி வருகிறார், தேஜஸ்வி. இந்நிலையில், இவருக்கு எதிராக அண்ணனே பிரசாரம் செய்து வருவது, லாலு குடும்பத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.'தேஜ் பிரதாப் நிச்சயம் வெற்றி பெற மாட்டார்' என்கின்ற னர், தேஜஸ்வி ஆதரவாளர்கள். 'தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளர்' என, கட்சி தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை காங்கிரசின் ராகுல் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
செப் 14, 2025 11:31

அப்பன் புள்ளை சண்டை, அன்னான் தம்பி சண்டை அங்கேயும் ஆரம்பித்து விட்டதா சபாஷ்


Barakat Ali
செப் 14, 2025 10:06

ராகுலை ஒரு தலைவராக.... வேண்டாம். ஒரு மனிதராகவாவது மதிக்கிறதா ஆர் ஜே டி ????


பாலாஜி
செப் 14, 2025 10:05

அரசியலில் இதெல்லாம் சகஜம். தமிழ்நாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகன் டாக்டர் அன்புமணி மோதல் சான்று.


Barakat Ali
செப் 14, 2025 10:05

இன்னொரு அஞ்சாநெஞ்சன், இன்னொரு துக்ளக்கார்? நாடு தாங்குமா ????


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 09:42

பாமகாவிலும் அண்ணன் என்னடா அக்கா என்னடா என்ற நிலைமையை உருவாக்கி விட்டார் பாமக நிறுவனர் தலைவர் திரு ராமதாஸ்.


Moorthy
செப் 14, 2025 08:51

நம் தமிழ்நாட்டில் நடக்காததா ? அப்பா மகன், அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை


nagendhiran
செப் 14, 2025 08:09

பங்காளி?


டி சங்கரநாராயணன் ஈரோடு
செப் 14, 2025 08:02

கூட்டணிக்கு வேட்டு வைக்க அண்ணன் தம்பி சண்டைக்கு இருந்தால் போதும்


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 07:56

இரு உருளைகள் மோதல் அதற்க்கு ஒரு தலையன் வேறு ஆதரவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை