உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறுதலாக எல்லை தாண்டிய பிஎஸ்எப் வீரர்: பாக்., சிறைபிடிப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய பிஎஸ்எப் வீரர்: பாக்., சிறைபிடிப்பு

பிரோஸ்பூர்: சர்வதேச எல்லையில் தவறுதலாக எல்லை தாண்டிய எல்லை பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து உள்ளனர்.காஷ்மீரன் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொண்டது. அந்நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேறவம், அந்நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்தும் உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y7gwu9vj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பஞ்சாபின்பிரோஸ்பூரில் சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றார். இதனையடுத்து அந்த வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்து சென்றனர்.

பிடிபட்டது யார்

பிஎஸ்எப் 182வது பட்டாலியனில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரியும் பிகே சிங் தான் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பிடிபட்டு உள்ளார். இவர் கோல்கட்டாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் விவசாயிகளுடன் உடன் சென்றதும், ஓய்வுக்காக மர நிழலில் ஒதுங்கிய போது பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை பாதுகாப்புடன் அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பிஎஸ்எப் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
ஏப் 24, 2025 21:50

சித்திரவதை செய்து கொல்லப்பட வாய்ப்பு ......


Rathnam Mm
ஏப் 24, 2025 20:11

It is tough time for him


Sudha
ஏப் 24, 2025 20:00

இது மாதிரி ஒன்றிரண்டு பேர்களால் நாம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் . தெரியாம தான் கேட்கிறேன், எல்லை தாண்டிய உடனே இந்திய வீரர் கைது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லா லெவலும் தாண்டி வந்தால் கூட தெரிவதில்லை. நாட்டு மக்கள் சில செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் எமோஷனல் பிளாக்மெயில் கூடாது.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 25, 2025 01:40

ரொம்ப சமத்து என்கிறார். தெரிந்து என்ன செய்ய? தெரிந்தவன் அர்பன் நக்சல் முத்திரை குத்தப் பட்டு சீரழிக்கப் படுவான். வீட்ல புலி வெளியில எலி.


Kasimani Baskaran
ஏப் 25, 2025 04:05

எல்லையில் வேலி போட காசில்லாமல் நேரு மாமா 555 ஊதித்தள்ளி விட்டாராம்.


Karthik
ஏப் 24, 2025 19:26

கல்யாணத்துல சீப்ப ஒளிச்சு வச்சுட்டா கல்யாணம் நின்னு போகுமா என்ன? அது மாதிரி ஒரு பிஎஸ்எப் வீரரை புடிச்சு வச்சுக்கிட்டா இந்தியா பயந்து போயி பின்வாங்கிடும்னு நினைக்குதோ அந்த தொடை நடுங்கி கோழைக் கூட்டம்?? பாகிஸ்தானோட கதறல் சத்தம் இங்கே வரை கேக்குது. ஓபனிங் முன்னாடியே கிளைமாக்ஸ் தெரிஞ்சுடுச்சி. ஜெய்ஹிந்த்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 24, 2025 18:46

இன்னொரு சினிமா உருவாகி சாதி சர்ச்சையை கிளப்புமா?


Anbuselvan
ஏப் 24, 2025 18:30

தப்பான நேரத்துலே போய் மாட்டிக்கிட்டாரே பாவம்