உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜியோவிடமிருந்து கட்டணம் வசூலிக்க மறந்த பி.எஸ்.என்.எல்.,

ஜியோவிடமிருந்து கட்டணம் வசூலிக்க மறந்த பி.எஸ்.என்.எல்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்ட, 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்திடம் இருந்து அதற்கான கட்டணத்தை, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வசூலிக்கவில்லை. இதனால், அரசுக்கு 1,757 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது.சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், 'பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்' நிறுவனம், தன் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள, 'ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.ஆனால், இதற்கான கட்டணத்தை வசூலிக்கவில்லை. இவ்வாறு, 2014 மே முதல் 2024 மார்ச் வரையிலான காலத்தில் மட்டும், கட்டணம், அபராதம் என, 1,757.56 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.முதன்மை சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கட்டணத்தை பி.எஸ்.என்.எல்., வசூலித்திருக்க வேண்டும்.இதுபோல, தொலைத்தொடர்பு கட்டமைப்பு வசதிகளை அளித்தோரிடம் இருந்து, லைசென்ஸ் கட்டணத்தை பி.எஸ்.என்.எல்., கழித்துக் கொள்ளவில்லை. இந்த வகையில், அரசுக்கு, 38.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

aaruthirumalai
ஏப் 03, 2025 12:30

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா....


venugopal s
ஏப் 03, 2025 11:52

மறக்கச் சொல்லி பெரிய இடத்தில் இருந்து உத்தரவு வந்து இருக்கும், பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 11:28

இது போல எத்தனையோ அரசியல்வாதிகள் பழைய டெலிபோன் கட்டண பாக்கி வைத்தார்கள். கேள்வியே எழவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக நேரு இந்திரா அமைச்சரவைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர் 10 ஆண்டுகளாக வருமான வரி கட்டவில்லை. மறந்து விட்டேன் என சமாளித்தார். பெரிய ஆட்களிடம் வசூல் செய்யவே தனி தைரியம் வேண்டும்.


J.Isaac
ஏப் 03, 2025 17:15

செய்த தவறை நியாயப்படுத்துவது அயோக்கியத்தனம்


Ethiraj
ஏப் 03, 2025 09:30

CAG why it didnt pointout so many years. Case of corruption punish them.


அப்பாவி
ஏப் 03, 2025 08:21

கமிஷன் வாங்கிட்டு கண்டுக்காம உட்டிருப்பாங்க. பா.சிதம்பரம் காலத்தில் இதே ஜியோ மீது 800 கோடிக்கு வரி ஏய்ப்பு வழக்கு போட்டு துட்டு வாங்கிட்டு 100 கோடிக்கு கணக்கை முடிச்சது அப்போ பிரசித்தம். அதனால்தான் 5000 கோடி செலவழிச்சு புள்ளைக்கு கல்யாணம் பண்ண முடியுது.


ameen
ஏப் 03, 2025 10:26

அந்த ப சிதம்பரம் காங்கிரஸ் வேண்டாம் என்றுதானே மோடியை கொண்டு வந்தார்கள்... 800 கோடிக்கு 100 என்றால் 1700 கோடிக்கு இவர் எவ்வளவு வாங்கிருப்பார்


R.RAMACHANDRAN
ஏப் 03, 2025 07:52

வேண்டப்பட்டவர்களுக்கு கடன்கள் வாரி வழங்கிவிட்டு வசூலிக்க மாட்டார்கள். அதே கொள்கையையே பாரதிய சென்சார் நிகாம் போன்ற அரசு நிறுவனங்களும் கடை பிடிப்பதால் இந்நிலை. இதே ஏழை மக்களாக இருந்து அவர்கள் செலுத்த தவறினால் எதை வேண்டுமானாலும் செய்வர்.


chennai sivakumar
ஏப் 03, 2025 07:06

எங்கள் சென்னை அலுவலகம் மூடப்பட்டு மும்பைக்கு மாற்றம் செய்ய பட்டது. அப்போது கொஞ்சம் மூட படும் வரையில் தொலைபேசி கட்டணம் பாக்கி இருந்தது. அதற்கு நான் ஒரு லெட்டர் கொடுத்து அந்த பில் ஐ மும்பை அனுப்புமாறு கோரி இருந்தேன். பிறகு ஒரு 5 வருடம் கழித்து சுமார் 10000 ரூபாய் எங்கள் நிறுவனம் தர வேண்டும் என்று பில் அனுப்பி அதில் என்னுடைய கடித நகலையும இணைத்து மும்பைக்கு அனுப்பி இருந்தார்கள். என்னுடைய மேல் அதிகாரி என்னை கூப்பிட்டு விளக்கம் கேட்டார். நானும் இது சென்னை அலுவலகம் மூடும்போது நமது நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை என்றவுடன் உடனே டிமாண்ட் draft eduthu நீங்கள் சென்னைக்கு செல்லும் போது அதை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் செலுத்தி விட சொன்னார் என் மேல் அதிகாரி. நான் சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வந்து ஒரு வழியாக கண்டு பிடித்து தொலைபேசி அதிகாரியிடம் அதை சமர்ப்பித்து என்ன சார் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து பில் அனுப்பினீர்கள். நான் அப்போ மும்பாயில் இல்லை என்றால் உங்களுக்கு பணம் வந்து இருக்காது என்றவுடன் அவர் கூறினார் இது போல நிறைய case ullathu. நான் மாத்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உங்கள நிறுவனத்திற்கு லாபம் என்றாரே பார்க்கலாம். இந்த லட்சணத்தில் நிறைய அரசு துறைகள் வேலை செய்கின்றது


chennai sivakumar
ஏப் 03, 2025 06:53

அடுத்தவன் வீட்டு நெய்யே என் அண்ணன் பொண்டாட்டி கையே என்ற சொல்வதை நினவு கூறுவோம்