உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 262 கோடி ரூபாய் லாபம்; 17 ஆண்டுக்கு பிறகு லாபத்தை காட்டியது பி.எஸ்.என்.எல்.,

262 கோடி ரூபாய் லாபம்; 17 ஆண்டுக்கு பிறகு லாபத்தை காட்டியது பி.எஸ்.என்.எல்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் நிறுவனங்களின் போட்டியால் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனையடுத்து, நிறுவனத்தை லாப பாதைக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிமுகம் செய்தது.இதனையடுத்து, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், தற்போது, மொபைல் இணைப்பு, வீடுகளுக்கு பைபர் சேவை ஆகியவற்றில், 14 முதல் 18 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், மொத்த சந்தாதரர்களின் எண்ணிக்கையும் 8.4 கோடியில் இருந்து 9 கோடியாக அதிகரித்து உள்ளது.இதனையடுத்து, 2024 - 25 நிதியாண்டின் 3வது காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் ஈட்டி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார். இது நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2007ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் நிறுவனம் லாபத்தை ஈட்டி உள்ளது.மேலும் நிதிச்செலவு உள்ளிட்ட மொத்த செலவினங்களை குறைத்ததால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.1,800 கோடி மிச்சமாகி உள்ளது. தற்போது 4ஜி சேவையை அமல்படுத்துவதில் பிஎஸ்என்எல் மும்முரமாக உள்ளது. இதற்காக ஒரு லட்சம் டவர்கள் அமைக்கபட வேண்டிய நிலையில், 75 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன. அதில் 60 ஆயிரம் டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. எஞ்சியவற்றை வரும் ஜூன் மாதத்திற்குள் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
பிப் 15, 2025 23:10

ரொம்ப சந்தோஷாம் எசமான்களே இப்போவாவது நான் மூன்றாண்டுகளுக்கு முன் சராண்டெர் செய்த தரை வழி தொலை பேசி டெபாசிட் பணத்தை திருப்பி கொடுத்தால் வயசானகாலத்தில் மாத்திரை மருந்து வாங்க உதவியாக இருக்கும் அடையாறு அலுவலகத்தில் கேட்டால் சரியான பதில் இல்லை ஒரு தொலைபேசி என் தருகின்றனர் அதற்கு போன் செய்தால் எடுக்கமாட்டேன் க்கிறார்கள் வாழ்க பி.எஸ் என் எல்


karthik
பிப் 15, 2025 09:05

மோடி பிஸ்னல் நிறுவனத்தை விற்று விட்டார் என்று சொன்ன எங்கே சென்றார்கள்?


Laddoo
பிப் 15, 2025 08:57

பிஸ்னல் இல் எப்போ கட்டுக் குடும்பம் புகுந்ததோ அன்றே அதற்கு விநேச காலம் ஆரம்பமாகி விட்டது. திருட்டுத்தனமாக கேபிள் கொண்டு தனி எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்தது முதல் பல மெகா ஊழல் மூலம் அதை குற்றுயிரும் குலயியிருமா செஞ்சுடாங்க. அதை நிமிர்த்துவதற்கு மோடியரசு பிரம்ம ப்ரயத்தனம் செய்தாலும் முடிவு விரைவிலேயே வந்துடும் போலிருக்கு. லாபம் காட்டும்போதே தனியாருக்கு விற்றுவிடுவது புத்திசாலித்தனம்


Vijaysmarter
பிப் 15, 2025 08:39

அனைத்து அரசு துறைகளிலும் தனியார் பங்களிப்பு ஏற்படுத்த வேண்டும் அப்பொழுது தான் நாடு விளங்கும்


Rajarajan
பிப் 15, 2025 06:24

இதைத்தான் திரும்ப திரும்ப சொல்கிறோம். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை / அரசு துறைகளை தனியார் மயமாக்குங்கள். தேவையற்றவற்றை இழுத்து மூடுங்கள். இதனால் மிச்சமாகும் பல்லாயிரம் கோடிகளை, அடுத்த தலைமுறைக்கான தொழில் முதலீடு, கல்வி, வேளாண்மை, நீர் மேலாண்மை, சுகாதாரம், போக்குவரத்து, உள்நாட்டு கட்டமைப்பிற்கு பயன்படுத்துங்கள் என்று. அப்போது தான் இந்தியா ஒளிரும்.


Vijaysmarter
பிப் 15, 2025 08:38

200%fact


ES
பிப் 14, 2025 22:51

Yeah lets sell everything to them. What a idiotic comment


Laddoo
பிப் 15, 2025 16:34

நீங்களே வாங்கிக்கிடுங்க. தொல்லை விட்டுச்சு


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 14, 2025 22:36

தனியார் மொபைல் நிறுவனங்கள் கட்டணங்களை கூட்டியபிறகு பி எஸ் என் எல் இடம் வந்த பலர் இணைய வேகத்தில் தரமில்லாததால் மீண்டும் தனியார் நிறுவனங்களின் சேவைக்கே திரும்பிவிட்டார்கள் .... இந்த காலாண்டு லாபமாகிய 262 கோடியை தனியார் அதிக பட்சம் ஒரே மாதத்தில் சம்பாதிக்கக் கூடியவர்கள் ....


தாமரை மலர்கிறது
பிப் 14, 2025 22:22

மீண்டும் இது நஷ்டத்தை தான் அடையும். இந்த நிறுவனத்தை அடானிக்கு விற்றுவிடுவது நல்லது.


Laddoo
பிப் 16, 2025 16:59

ஏனுங்கோ எலன் மஸ்கிடம் கேட்பது தானே?


சமீபத்திய செய்தி