உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட் புதிய உத்வேகத்தை அளிக்கும்: பிரதமர் மோடி பேட்டி

பட்ஜெட் புதிய உத்வேகத்தை அளிக்கும்: பிரதமர் மோடி பேட்டி

புதுடில்லி: இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன் என பார்லி வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்தார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம், பிப்., 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர், ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6hmcasxi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உத்வேகம்

ஏழைகள், நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை வேண்டுகிறேன். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். மகாலட்சுமி வெற்றியையும், விவேகத்தையும் தருபவர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டு விட்டு வருகிறேன். 3வது முறையாக, சேவையாற்ற நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

மசோதாக்கள்

மூன்றாவது முறை ஆட்சியில் பா.ஜ., அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட். புத்தாக்கத்துக்கான பட்ஜெட் ஆக இருக்கும். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். மக்களின் மேம்பாட்டிற்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறேன். 3வது முறை ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தாரக மந்திரம்

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். செயல்பாடு, மாற்றம் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 2047 ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும். நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.,களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜன 31, 2025 17:51

இன்னுமா இந்த ஊர்க்காரங்க நம்பளை நம்புறாங்க? வேறு வழி,அது அவங்க தலையெழுத்து!


guna
ஜன 31, 2025 20:50

ஆமாம் நம்புங்க...தமிழ்நாட்டில் சட்டம்.ஒழுங்கு சிறப்பாக உள்ளது....


Duruvesan
ஜன 31, 2025 13:35

இந்த பத்து வருஷத்தில் நல்லதே நடந்து உள்ளது


இறைவி
ஜன 31, 2025 13:19

உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும் உறவையும் பாராட்டுகிறது. நாட்டின் உள்கட்டமைப்பும், தொழில்களும் பெறும் அளவில் வளர்ந்திருக்கிறது. வரி விகிதங்கள் பெறும் அளவு குறைக்கப்பட்ட பின்னும் வரி வசூல் மாதா மாதம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் கடன் வெறும் ரூபாய்களில் பார்த்தால் அதிகரித்தது போல தோன்றும். ஆனால் நாட்டின் வருமானத்தின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து இருக்கும். டாஸ்மாக் உபிகளுக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வருடம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவன் பத்தாயிரம் கடன் வாங்குவதற்கும் வருடம் மூன்று லட்சம் சம்பளம் வாங்குபவன் பதினைந்தாயிரம் கடன் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம். முதலானவன் வருமானத்தில் பத்து சதம் கடன் வாங்குகிறான். இரண்டாமவனோ ஐந்து சத்தம்தான் கடன் வாங்குகிறான். இங்கு வெவ்வேறு பெயர்களில் கருத்து போட்டிருக்கும் உபிகளுக்கு மோடி, பிஜெபி எதிர்ப்பு மட்டுமே தெரியும். நாடும் வீடும் வளர்ந்து செழிப்பானாலும் இவர்கள் ஒரு மூலையில் உட்கார்ந்து எழவு வீட்டு ஒப்பாரி வைக்கும் ரகம். பொருளாதாரமோ உலக நடப்போ தெரியாது.


கந்தன்
ஜன 31, 2025 12:47

எனக்கெல்லாம் 10 பைசா பிரயோஜனம் இல்ல


Duruvesan
ஜன 31, 2025 13:20

உனக்கு விடியலு குடுப்பார்


ES
ஜன 31, 2025 12:31

More Lies already fooled people for ten years


Duruvesan
ஜன 31, 2025 13:20

ஆமாம்


ghani
ஜன 31, 2025 13:39

so you were brilliant before 10 years?? don't bluff....


Mediagoons
ஜன 31, 2025 12:10

நாட்டின் மதிப்பு வரலாறு காணாத சரிவு. நாட்டின் கடன் வரலாறு காணாதது. அனைத்தும் மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. படித்த குண்டர்களால் திட்டமிட்டு சுமத்தப்பட்டள்ளது. ரத்தம் சிந்தி உழைத்து சம்பாதித்த மக்களிடமே சட்டத்தின் துணையுடன் துணிகர கொள்ளை. பலவருடங்களாக படித்தவர்களால் திட்டமிட்டு கொள்ளை.


Mediagoons
ஜன 31, 2025 12:03

இந்து மதவாத கொள்ளையர்களுக்கு கார்போரேட்டு கொள்ளையர்களுக்கு ஒவ்வொரு பட்ஜெட்டும் துணை புரிகிறது


Duruvesan
ஜன 31, 2025 13:22

2014 முதல் குண்டு வெக்க வந்தவன் எல்லாம் திரும்பி போகல, பெங்களா மூர்க்ஸ் எல்லாம் இப்போ அரேஸ்ட் ஆகரானுங்க


veera
ஜன 31, 2025 11:42

பங்களாதேஷ் உங்களை அன்போடு அழைக்கிறது ....


sridhar
ஜன 31, 2025 11:05

வருடா வருடம் இதே புருடா . போன வருஷம் கொடுத்த வேகம் என்னாச்சு .


SANKAR
ஜன 31, 2025 11:49

no.no..this will be another budget for HUNDRED YEARS !!!


அப்பாவி
ஜன 31, 2025 10:58

அட்ரா சக்க... பத்திரிக்கை நிருபர்களை சந்திக்கிற ரேஞ்சுக்கு இறங்கி வந்துட்டாரு. இன்னும் இறங்கி வாங்க. வரணும்.


சமீபத்திய செய்தி