வாசகர்கள் கருத்துகள் ( 2 )
யாரோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லாதீங்க. நேரு ஜீ தான் காரணம்னு சொன்னா தப்பிச்சோம்.
டிரில்லியன் டாலர் மதவாத கொள்ளைக்கூட மத்திய மாநில அரசுகளின் அலங்கோலம்
புதுடில்லி: டில்லியில் பலமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.டில்லியில் முஸ்தபாபாத் நகரில் இருந்த பலமாடி கட்டடம் ஒன்று இன்று (ஏப்.19) அதிகாலை திடீரென சரிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அங்குள்ளோர் அச்சம் அடைந்து ஓடினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xctumuhq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சரிந்து விழுந்த கட்டடத்தின் உள்ளே ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. விசாரணை தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.
யாரோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லாதீங்க. நேரு ஜீ தான் காரணம்னு சொன்னா தப்பிச்சோம்.
டிரில்லியன் டாலர் மதவாத கொள்ளைக்கூட மத்திய மாநில அரசுகளின் அலங்கோலம்