உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

டில்லி ரோஹினியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கி உள்ளதாக அச்சம்

புதுடில்லி: டில்லியின் ரோஹினி பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் புதைந்து போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.டில்லியின் ரோஹினி பகுதியில் இன்று மாலையில் ஒரு கட்டடம் இடிந்து வீழுந்தது. இதில் குறைந்தது இருவர் இடிபாடுகளில் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில்,டில்லி தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக, தீயணைப்பு துறையினர் கூறியதாவது:இன்று மாலை டில்லியின் செக்டார் 7 லிருந்து கட்டிடம் இடிந்துவிட்டதாக, எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் 5 குழுக்கள் சம்பவம் நடத்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை