உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது; சச்சினுக்கும் விருது வழங்கியது பி.சி.சி.ஐ.,

பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது; சச்சினுக்கும் விருது வழங்கியது பி.சி.சி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றார்.நமன் எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரைப் பதித்து வரும் பும்ரா, பி.சி.சி.ஐ.,யின் 2024ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதான, பாலி உம்ரிகர் விருதை மீண்டும் வென்றுள்ளார். இதற்கு முன்பாக, 2018-19, 2021-22ம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார். உலக கிரிக்கெட் அணிகளுக்கே பெரும் சவாலாக திகழ்ந்து வரும் பும்ரா, அண்மையில் 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதையும், ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். அதேபோல, 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்தத் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 2024ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக (71) விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் திகழ்ந்தார். பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. அதேபோல, மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனை விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது. ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை ஷர்பிராஷ் கானும், மகளிர் பிரிவில் ஆஷா ஷோபனாவும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijai
பிப் 02, 2025 21:11

sachin tendulkar லெவல் வேற இந்திய கிரிக்கெட்டை புகழ் பெற செய்தவர் கண்டவர்களுக்கு எல்லாம் கொடுக்கும் போதுகொடுக்கும் போது அவருக்கு கொடுப்பது தவறில்லை அவர் கிரிக்கெட் கடவுள்


Laddoo
பிப் 02, 2025 06:26

தன்னலம் பாராமல் தயான் சந்த் என்ற ஹாக்கி வீரன் நாட்டுக்காக விளையாடி கடைசியில் தர்ம ஆஸ்பத்திரியில் உயிரை விட்டான். இருக்கும் எல்லாம் விருதுகளையும் சச்சினுக்கே அர்பணித்துவிட்டு கம்பளியை போத்திகினு தூங்கிடுங்க. எந்த தகுதியில் த்யான சந்த் விட இவர் மேலானவர் என்று சரத் பவார் இவருக்கு பாரத் ரத்னா வழங்கினார்? டிரம்ப் கையில் உலக ரத்னா ஓன்று வழங்க வேண்டியது தான் பாக்கி. அதையும் வழங்கிட்டிங்கனா ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடும்


Bye Pass
பிப் 01, 2025 23:00

சச்சினுக்கு இன்னும் எத்தனை தடவை விருது தருவாங்க ?