தேசிய கொடி நிறத்தில் பர்பி
செய்முறைமுதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அரை கப் நெய் ஊற்றி சூடாக்குங்கள். அதில் ஒரு கப் மைதா மாவை போட்டு இரண்டு நிமிடம், கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறுங்கள்.மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு கப் சர்க்கரையை போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். சர்க்கரை கரைந்து கெட்டியான பாகு பதம் வந்ததும், மைதா கலவையை போட்டு கட்டியில்லாமல் நன்றாக கிளறுங்கள். இதில் ஏலக்காய் பொடியை போட்டு, ஸ்டவ்வை அணையுங்கள்.இந்த கலவையை மூன்று பாகமாக பிரியுங்கள். ஒரு பாகத்தில் பச்சை நிறத்தை போட்டு, நன்றாக கிளறுங்கள். மற்றொன்றில் கேசரி பவுடரை போட்டு கிளறுங்கள். மூன்றாவது பாகம் வெண்மையாக இருக்க வேண்டும்.பட்டர் பேப்பரை, ட்ரே மீது பரப்புங்கள். அதன் மீது முதலில் பச்சை நிற கலவையை போட்டு பரப்புங்கள். அதன் மீது வெள்ளை நிற கலவையை பரப்புங்கள். கடைசியாக கேசரி நிற கலவையை பரப்புங்கள். அதன்பின் ட்ரேவை தலை கீழாக திருப்புங்கள். சதுர வடிவத்தில் வெட்டினால் மூவர்ண பர்பி தயார். தீபாவளிக்கு செய்து ருசித்து பாருங்கள்.- நமது நிருபர் -மூவர்ண தேசிய கொடியை அனைவருக்கும் தெரியும். மூவர்ண இனிப்பு பர்பியை தெரியுமா? எப்படி செய்வது என, பார்ப்போமா?தேவையான பொருட்கள் நெய் - 1/2 கப் மைதா - ஒரு கப் சர்க்கரை - 2 கப் தண்ணீர் - ஒரு கப் ஏலக்காய் பொடி - 1/4 கப் பச்சை கலர் - 1/4 ஸ்பூன் கேசரி கலர் - 1/4 ஸ்பூன்