உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சை நிறுத்தி தொழுகை; டிரைவர் சஸ்பெண்ட்

பஸ்சை நிறுத்தி தொழுகை; டிரைவர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : கர்நாடகாவில், அரசு பஸ்சை நிறுத்திவிட்டு தொழுகை நடத்திய டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து ஹாவேரிக்கு கடந்த ஏப்., 29ம் தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவர் முல்லா, திடீரென பஸ்சை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, காலியாக கிடந்த பயணியர் இருக்கையில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டார். இதை பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, வடமேற்கு சாலை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரியங்காவுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி எழுதியுள்ள கடிதம்:ஹூப்பள்ளியில் இருந்து ஹாவேரிக்கு சென்ற பஸ்சை, டிரைவர் சாலை ஓரம் நிறுத்தி தொழுகையில் ஈடுபட்டுள்ளார். இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.அரசு ஊழியர்கள், பணி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரத்துக்கு உரிமை உண்டு. ஆனாலும், பொது சேவையில் இருப்போர், உத்தியோக கடமைகளுக்கு வெளியே தங்கள் மதத்தை பின்பற்றலாம்.எனவே, பணி நேரத்தில் பஸ்சை நடுவழியில் நிறுத்தி, பயணியர் இருக்கும் போது தொழுகையில் ஈடுபட்டது ஆட்சேபனைக்கு உரியது. இது தொடர்பாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.இதையடுத்து, தொழுகையில் ஈடுபட்ட டிரைவர் முல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த, போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Haja Kuthubdeen
மே 02, 2025 12:19

இதெல்லாம் ஓவர் சீன்....நடவடிக்கை சரியே...


மஞ்சுநாத் . Bengaluru
மே 02, 2025 12:15

சித்து என்ற தத்து தந்த சுதந்திரம்.


பாமரன்
மே 02, 2025 11:11

சரியான நடவடிக்கை... மத நம்பிக்கை முக்கியம்னா வீட்ல இருக்க வேண்டியதுதானே...?? எத்தனை ஆயிரம் டிரைவர் கண்டக்டர்கள் பண்டிகை நாட்களில் டூட்டி பாக்குறாங்க... இவிங்க என்ன பெஷலா...??


l.ramachandran
மே 02, 2025 06:39

அரசு ஊழியர்கள், பணி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரத்துக்கு உரிமை உண்டு. ஆனாலும், பொது சேவையில் இருப்போர், உத்தியோக கடமைகளுக்கு வெளியே தங்கள் மதத்தை பின்பற்றலாம். இது புரியவில்லை எனில்????


Kasimani Baskaran
மே 02, 2025 03:49

ஓடும் பஸ்ஸில் தொழுகை நடத்தவில்லையே என்று பாராட்டுவதை விட்டுவிட்டு அவர் மீது நடவடிக்கை என்பது ஒருவகை வன்மம்..


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2025 11:27

பஸ்ஸை மசூதிக்கு ஒட்டி சென்று தொழுகை நடத்தாமல் இருந்ததே பெரிய விஷயம்.


nisar ahmad
மே 02, 2025 02:50

நம்ம ஊர்களில் பஸ் டிரைவர்கள் முதல் டிரிப் ஆரம்பிக்கும் போது வழியில் பஸ்ஸை கோவில் முன் நிறுத்தி பூஜை செய்து விட்டு புறப்படுவார் அதில் இந்து முஸ்லிம் கிருஸ்தவர் என்று எல்லா பயனிகளும் இருப்பர் யாரும் இதை தவறாக பார்தில்லை முஸ்லிம் டிரைவ என்பதால் இது நடக்கிறது நாளை கோவில் முன் வண்டியை நிறுத்தி பூஜை செய்தாலும் முஸ்லிம் பயனிகள் வீடியோ எடுத்து போட வேண்டும் .


சந்திரன்
மே 02, 2025 07:00

வாடா உன்னத்தான் உலகம் தேடுது உனக்கு விமானத்தில் ரயிலில் டிரைவர் போஸ்டிங் தரனுமாம்.


Yuvaraj Velumani
மே 02, 2025 10:01

திருட்டு கும்பல் எப்பவும் இப்படித்தான்


PR Makudeswaran
மே 02, 2025 10:51

முதல் முதல் டிரிப் என்பது வேறு . தினசரி தொழுகை என்பது வேறு. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. புரியவில்லையா? புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா ?


S Ramkumar
மே 05, 2025 17:27

நிறுத்ட்தி 15 நிமிடம் பிரார்த்தனை செய்வதற்கும் வழியில் தெருவோரம் இருக்கும் எல்லை தெய்வங்களுக்கு சிலவினாடிகளில் காசு போட்டு விட்டு ஏறும் செயலும் ஒன்றா? இவர் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால் பணி மனையிலோ பஸ் பெரிய பேருந்து நிலையங்களில் நிற்கும் போதோ பிரார்த்தனை செய்யலாமே. ஓடும் பேருந்தை நிறுத்ட்தி விட்டு பிரார்திப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். நீங்கள் சொல்லுவது போல் முதல் ட்ரிப் தனியார் வண்டிகளில் வேண்டுமானால் நடை பெறலாம். அரசாங்க பேருந்துகளில் நினைத்த்து பார்க்க கூட முடியாது.


மீனவ நண்பன்
மே 02, 2025 02:24

விமான ஓட்டியாக இவரை நியமிக்காமல் ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து வைத்திருக்கிறான் ..


Vignesh Rajendran
மே 02, 2025 00:53

கருப்பசாமி கோவிலில் பஸ் நிறுத்துவது சரி என்றால் இதுவும் சரியே


N Sasikumar Yadhav
மே 02, 2025 16:01

தின்கிற ஓசி பிரியாணிக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் வாழ்த்துகள்


shakti
மே 08, 2025 20:45

எச்சில் துப்பிய பிரியாணிக்கே இம்புட்டு விசுவாசமா ???


சமீபத்திய செய்தி