உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை டெலிவரி எடுத்த இந்திய தொழிலதிபர்!

ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை டெலிவரி எடுத்த இந்திய தொழிலதிபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகில் அதிக விலை கொண்ட 3 ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார்களை இந்திய தொழிலதிபர் சஞ்சய் கோடாவாட் டெலிவரி எடுத்துள்ளது, பேசு பொருளாகி இருக்கிறது. உலகளவில் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பெரும் நடிகர்கள், தொழிலதிபர்கள், மன்னர்கள் வாங்குவது வழக்கம். வாகன சந்தையில் இந்த கார்களுக்கு என்று எப்போதும் தனி இடமே உண்டு.இப்படிப்பட்ட சொகுசான ஆடம்பரம்மிக்க ரோல்ஸ் ராய்ஸின் 3 கார்களை ஒரே நாளில் தொழிலதிபர் சஞ்சய் கோடாவாட் டெலிவரி எடுத்துள்ளார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், சஞ்சய் கோடவாட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவரின் தொழில் சாம்ராஜ்யம் பெரியது.தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சுரங்கம் என பல்வேறு தொழில்களில் இவரின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவர் தற்போது 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஒரே நாளில் வாங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் 2, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் இவி என்ற 3 கார்களை தான் சஞ்சய் கோடாவாட் வாங்கி இருக்கிறார். இந்த கார்களின் விலையே முறையே ரூ. 10.50 கோடி, ரூ.8.95 கோடி மற்றும் ரூ. 7.50 கோடியாகும்.பாதுகாப்பு மற்றும் சவுகரியமான பயணங்களுக்காக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தொழிலதிபர்கள் வாங்குகின்றனர் என்றாலும் கூட, ஒரே நாளில் பல கோடி ரூபாய் விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸின் 3 கார்களை டெலிவரி எடுத்துள்ளதன் மூலம் சஞ்சய் கோடாவாட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கார்களுடன் சஞ்சய் கோடாவாட் எடுத்துள்ள போட்டோக்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

மகா
ஆக 25, 2025 21:57

இவர்தான் மஹாராஷ்டிரவின் பான் மற்றும் குட்கா கிங். இப்ப வேறு துறைகளில் நகர்ந்து விட்டார். தொட்டதெல்லாம் பணம்.


என்றும் இந்தியன்
ஆக 25, 2025 16:32

காசிருக்கின்றது வாங்குகின்றான் இதில் என்ன தவறு. காசிருக்கின்றது கள்ள ஒட்டு போடவைக்கின்றது இது தவறு. காசிருக்கின்றது கள்ளக்காதலி கேட்கின்றது. இது தவறு. இந்த இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது


தத்வமசி
ஆக 25, 2025 16:10

எங்க அண்ணன் போடும் டீ ஷர்ட் மற்றும் ஷூவே அவரது தகுதியைக் காட்டும். அவரால் வாங்க இயலாத காரா இது ? மக்களோடு மக்களாக பழகுகிறார். அதனால் வாங்கவில்லை. அவர் மட்டுமல்ல எல்லா லட்டர்பேடு கட்சித் தலைவர்களாலும் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்க இயலும். ஆனால் மக்களோடு மக்களாக பிணைந்து பழக விரும்புவதால் மக்கள் படும் துயரங்களைக் கண்டு துவண்டு போய் அவர்கள் இப்படிப்பட்ட விளையுயர்த்த காரை வாங்க மனமில்லை.


V.Mohan
ஆக 25, 2025 16:03

ஹூம். சொல்வீங்க, """அவர் உழைப்பு, அவர் பணம் ?""" முதல் அவுருதா இருக்கலாவம். எல்லா தொழிலாளர்களுக்கும் நல்லபடி சம்பளம், போனஸ் கொடுத்திருந்தால் பாராட்டலாம். ஆனா,மேனேஜர்களை வைத்து வேலை வாங்கி, வேலை முடித்தவுடன் மேனேஜர்களுக்கு எக்ஸ்டிரா போனஸ் தருபவன் என்ன முதலாளி ?? அமேரிக்க அதிபர் டிரம்பின் தடாலடி மாற்றங்களை தங்களுடைய நன்மைக்காக உபயோகப்படுத்தும் இந்த முதலாளிகள். நல்லவர்களா? மாததம்பளக்காரர்களின் மென்னியில் கத்தி வைத்து வருஷம் பூரா, மாதாமாதம் வருமான வரி வசூல் வாங்கிடுவாங்க. ஆனா இந்த பைனான்ஸ் கண்டரோலர் நிர்மலா அம்மணி சொல்படி முதலாளிகள், காருக்கு தேய்மானம்னு 30 % வருமான வரி விலக்கு தந்துடுவாங்க என்ன கவரன்மெண்ட நியாயம ???


RAMAKRISHNARAJU
ஆக 27, 2025 07:25

Do u know he didnt pay salary properly? why spitting venom on a person whom u have not seen atall. I think u r a parmbarai illiterate kothadimai Dravidiyapaiyan. 30% depreciation for cars?. It is only 15% and it was not done by FM yesterday. This was done during Shamegress govt. blong back.


Vijay D Ratnam
ஆக 25, 2025 15:43

விடுங்க பாஸ், பல் இருக்கறவன் பகோடா சாப்பிடுறேன். பன்னையே ஊற வச்சி திங்குறோம். பைக்குக்கு டயர் மாத்தணும்னு ஆறு மாசமா நெனச்சுக்கிட்டு இருக்கேன். தொழில் அதிபரே நல்லா நிறைய சம்பாதிங்க, நிறைய பேருக்கு வேலை கொடுங்க, முறையா வரியை கட்டுங்க. அடுத்து சார்ட்டட் ஃப்ளைட் வாங்குங்க.


duruvasar
ஆக 25, 2025 12:49

நாங்கஎல்லாம் 14 கோடியில் வாட்ச் கற்றார் மாடல் . இதெல்லாம் ஒருசெய்தியுனு போட்டு எங்க மானத்தை வாங்காதீங்க .


VSMani
ஆக 25, 2025 11:53

புத்தி அறிவு இருக்கிறவன் சம்பாதிக்கிறான் அனுபவிக்கிறான். எல்லாருக்கும் ஒரே அளவு மூளை தான் இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவருடைய மூளை பயன்பாடும் வெவ்வேறு. பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். இதில் பொறாமை கொள்வதில் அர்த்தம் இல்லை.


Indian
ஆக 25, 2025 10:56

நீங்கள் முதலாளி ஆகி பண்ணுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னார்கள்? வக்கு இல்லை என்றால் சும்மா இருக்கவும்


இளந்திரயன், வேலந்தாவளம்
ஆக 25, 2025 10:31

பலபேருக்கு அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லை... சிலருக்கு பணம் எப்படி செலவுசெய்து கரைப்பது என தெரியாமல் கவலைப் படுகிரார்கள்


Venkatesan Srinivasan
ஆக 25, 2025 18:01

பொது உடைமை என்பது இந்தியாவில் சோம்பேறிகளின் தாரக மந்திரம். சோவியத் யூனியன் அதை நடைமுறைப்படுத்தி நொடிந்து போனது.


Venkatesan Srinivasan
ஆக 25, 2025 18:09

பொது உடைமை என்பது இந்தியாவில் சோம்பேறிகளின் தாரக மந்திரம். சோவியத் யூனியன் அதை நடைமுறைப்படுத்தி நொடிந்து போனது. பொது விநியோக திட்டத்தில் மத்திய அரசு இலவசமாக அரிசி கோதுமை வழங்குகிறது. எனவே இந்தியாவில் யாரும் உணவில்லை என்று கூற முடியாது. அம்மா உணவகங்களில் மிகவும் குறைவான விலையில் சமைத்த உணவே கிடைக்கிறது.


தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 25, 2025 09:48

தன் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் மற்ற படிகளை ஒழுங்காக கொடுக்காமல், பொருட்களை அதிக விலையில் விற்று சேர்த்த பணத்தில் வாங்கிய முதலாளிக்கு வாழ்த்துக்கள்


shyamnats
ஆக 25, 2025 11:39

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த கருத்து பதிவு ?


Kumar Kumzi
ஆக 25, 2025 13:29

அப்பிடியே திராவிஷ குடும்பத்துக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடு


RAMAKRISHNARAJU
ஆக 27, 2025 07:28

Did u know he has not paid salaries to d employees, selling higher rate.


சமீபத்திய செய்தி