உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய டிவி தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்

இந்திய டிவி தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல அமெரிக்க கோடீஸ்வரரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல ஹிந்தி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2020ல், 'ஸ்டார் பிளஸ்' ஹிந்தி சேனலில் 'கியோங்கி சாஸ் பீ, கபி பஹு தீ' என்ற தொடர் ஒளிபரப்பானது. 'மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளே' என பொருள்படும் இந்த தொடரில், துளசி விரானி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடித்திருந்தார். முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெருமளவு வரவேற்பு பெற்றது. இதையடுத்து, பா.ஜ.,வில் சேர்ந்த ஸ்மிருதி இரானி, தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், 'கியோங்கி சாஸ் பீ, கபிபஹு தீ' தொடரின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த தொடரில், பில் கேட்ஸ் நடிப்பது உறுதியாகிஉள்ளது. இந்த தொடரின் 'ப்ரோமோ' எனப்படும் முன்னோட்டம் நேற்று வெளியானது. அதில், ஸ்மிருதி இரானி, 'லேப்டாப்' வழியாக 'வீடியோ' அழைப்பில் பில் கேட்ஸ் உடன் பேசுவது போல் காட்சி வெளியானது. 'ஜெய் கிருஷ்ணா... நீங்கள் அமெரிக்காவில் இருந்து எங்கள் குடும்பத்தினருடன் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது' என ஸ்மிருதி இரானி கூற, பதிலுக்கு பில் கேட்ஸ், 'தேங்க் யூ துளசி ஜி' என கூறுகிறார். இதன் மூலம் இந்திய 'டிவி' தொடரில் முதன் முறையாக பில் கேட்ஸ் தோன்றியுள்ளார். பெண்கள் ஆரோக்கியம் இந்த தொடரில், மூன்று அத்தியாயங்களில் தோன்றும் பில் கேட்ஸ், தன் தொண்டு நிறுவனத்தின் பணிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன், அமெரிக்காவின், 'தி பிக் பேங் தியரி' என்னும் 'டிவி' தொடரில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sathu
அக் 24, 2025 11:02

இன்னும் எவ்வளவு குடும்பங்களை அழிக்க போறானோ தெரியவில்லை.


Ramesh Sargam
அக் 24, 2025 07:04

இப்பொழுது உள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நேரம் இருந்தால் அவரும் இந்திய சீரியல்களில் நடிக்க விருப்பம் காட்டுவார். பாவம் அவருக்கு பல வேலைகள் உள்ளன. நாடுகளுக்கிடையே நடக்கும் போரை நிறுத்தவேண்டும், தன்னுடைய பேச்சை கேற்காத நாடுகளுக்கு அதிக வரி விதிக்கவேண்டும், அமைதிக்கான நோபல் பரிசுக்காக போராடவேண்டும், இப்படி பல வேலைகள்.


Iyer
அக் 24, 2025 06:29

உலகில் உள்ள VACCINATION, INOCULATION, INJECTION தயாரிக்கும் MAFIA கம்பெனிகளில் 95% பங்கு உள்ளவன் இந்த உலகமகா கொள்ளையன் - BILL GATES. VACCINATION, INJECTION போன்றவற்றால் எந்த வியாதியையும் தடுக்க முடியாது - மாறாக மனிதனை மேலும் பல நோய்களுக்கு ஆளாக்கும். இந்த திருடன் என்ன நோக்குடன் இந்திய TV ல் நுழைகிறான் என்பதை தீவிரமாக ஆராய வேண்டும்.


சாமானியன்
அக் 24, 2025 06:08

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுபவங்கள் அந்த துறையில் உள்ளவர்கட்கு பயன்படும். மனஅழுத்தம் தவிர்க்க என்ன செய்தார் என்ற படிப்பினை மற்றவர்கட்கு அறிய உதவும்.


Kasimani Baskaran
அக் 24, 2025 03:56

விசை டீவி சீரியலில் நடித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும்...


kannan
அக் 24, 2025 03:37

அட நம்ம ஏல் பல்கலைக்கழக மாணவி பொய் சொல்லி பதவி வாங்கி, டிகிரி பொய்யானதும் பதவி பறிக்கப்பட்டவர் என்பது உண்மையா? இன்னொருவர் எப்போது சிக்குவார் என்று தெரியவில்லை


m.arunachalam
அக் 24, 2025 01:07

உப்பு சப்பு இல்லாத விஷயம் . மக்களின் நேரத்தையும் , கவனத்தையும் வீணடிக்கும் விஷயம்