உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி

900 முறை பாங்காக் பயணித்த தொழிலதிபர்: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் வினோத் குப்தா, கடந்த 10 ஆண்டுகளில் 900 முறை பாங்காக் சென்றுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வினோத் குப்தா, இவர் மீது கடந்த ஆண்டு இறுதியில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.இந்த விசாரணையில் வினோத் குப்தா, வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் போலி பாஸ்போர்ட் மோசடி, ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெரிய நெட்வொர்க்குடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும்வழக்கத்திற்கு மாறாக தாய்லாந்தின் பாங்காக்கிற்கு 10 ஆண்டுகளில் 900 முறை பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்,மேலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த வருமானம் ஹவாலா நெட்வொர்க் மூலம் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டதா என்பதை விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

baala
நவ 06, 2025 09:57

கண்டு பிடித்து விட்டார்கள் 900 முறை கு பிறகு.


Kasimani Baskaran
நவ 06, 2025 04:08

வின்சியை பின் தொடர்ந்து சென்று இருக்க வாய்ப்பு இருக்கிறது.


AaaAaaEee
நவ 06, 2025 01:40

i know he is pilot or server right


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 22:35

சரி தான்.


duruvasar
நவ 05, 2025 22:01

இவருடைய அன்னான் கூட அடிக்கடி பட்டயா போய்விட்டு வருகிறார். வந்து மர்ம வியாதியால் படுத்துவிடுகிறார்.


Vasan
நவ 05, 2025 21:02

900 முறை பாங்காக் சென்று வந்தது கின்னஸ் சாதனையா?


M Ramachandran
நவ 05, 2025 20:47

எந்த புத்தில் எந்த பாம்போ?


அப்பாவி
நவ 05, 2025 19:34

கடந்த பத்து வருசமா, அதாவது பொற்கால ஆட்சி ஆரம்பிச்சதும்....


Naga Subramanian
நவ 05, 2025 19:23

நம்ம பப்புவுக்கு தெரியுமா?


Ganesun Iyer
நவ 05, 2025 19:08

தண்ணி தொட்டி லோகல் மேட்டரையே திராவிட ஸ்காட்லாந்தால கண்டு பிடிக்க முடியல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை