மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
7 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
8 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
புதுடில்லி:இந்தியாவில் மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவதுஇந்தியாவில் மூன்று செமிகண்டக்டர் ஆலைகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மூன்று நிறுவனங்கள்
ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 100 நாட்களில் துவங்க உள்ளன. இந்த ஆலைகளின் முதலீட்டு மதிப்பு 1.26 லட்சம் கோடி ரூபாயாகும். 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம், தைவானின் 'பவர்சிப்' செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து, 91,000 கோடி ரூபாய் மதிப்பில், குஜராத்தின் தோலேராவில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கிறது. மேலும், 'டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட்' நிறுவனம், அஸ்ஸாம் மாநிலம் மோரிகானில் 27,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செமிகண்டக்டர் ஆலை ஒன்றை அமைக்க உள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட 'சி.ஜி., பவர்' நிறுவனம், குஜராத்தில், ஜப்பானின் 'ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் தாய்லாந்தின் 'ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்' ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, 7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செமிகண்டக்டர் ஆலையை அமைக்கிறது. இந்த ஆலைகளின் வாயிலாக 20,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் மற்றும் கிட்டதட்ட 60,000 பொதுவான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த மூன்று ஆலைகளின் மொத்த முதலீடு 1.26 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி திறன்
மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை, மாதத்திற்கு 25 கோடி சிப்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி ஆலை ஒரு நாளைக்கு 4.80 கோடி சிப்களையும், சி.ஜி., பவர் ஒரு நாளைக்கு 1.5 கோடி சிப்களையும் உற்பத்தி செய்யும். இவ்வாறு அவர் கூறினார். மூன்று ஆலைகளுக்கு ஒப்புதல் டாடா எலக்ட்ரானிக்ஸ் டாடா செமிகண்டக்டர் சி.ஜி., பவர் மொத்த மதிப்பு 1.26 லட்சம் கோடி ரூபாய் 20,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்பு 60,000 பொதுவான வேலைவாய்ப்பு
7 hour(s) ago | 7
8 hour(s) ago | 1
8 hour(s) ago | 8