முதல் கூட்டத்தொடரில் சி.ஏ.ஜி., அறிக்கைகள்
ரோகிணி:“சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள சி.ஏ.ஜி., அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்,” என, புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள ரோகிணி எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “சபாநாயகர் பதவிக்கு பா.ஜ., சார்பில் நான் போட்டியிடுகிறேன். முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தால் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த சி.ஏ.ஜி., அறிக்கைகளை சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வேன்,” என்றார்.இதே விவகாரத்தில் சி.ஏ.ஜி.,யின் 14 அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்யும் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றவர் விஜேந்தர் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.