உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குரங்கு, மென்டல் என விமர்சிக்கப்பட்ட பெண் பாரா ஒலிம்பிக்கில் சாதனை

குரங்கு, மென்டல் என விமர்சிக்கப்பட்ட பெண் பாரா ஒலிம்பிக்கில் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிறக்கும் போதே, ' குரங்கு', ' மென்டல்' என உறவினர்களின் விமர்சனத்திற்கு உள்ளான தீப்தி ஜிவன்ஜி, பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளதுடன் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.ஒருவர் நம்பிக்கையுடன் முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை பாரிசில் நடக்கும் பாரா ஒலிம்பிக் தொடர் உலகத்திற்கு எடுத்துக்காட்டி வருகிறது. தடகள வீராங்கனைகள், பல்வேறு தடைகளை தாண்டி ஏராளமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் இந்தியாவின் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த தீப்தி ஜிவன்ஜி. பிறந்தது முதல் பல்வேறு தடைகளை சந்தித்த அவர், அதில் மனம் தளராமல் போராடி, 400 மீ., ஓட்டத்தில் 55.82 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 21வது வெண்கலம் ஆகும். இதற்கு முன்னர் ஜப்பானில் நடந்த உலக தடகள பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருந்தார். பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவருக்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவரின் சாதனை குறித்தும், இளம் வயதில்நேர்ந்த அவமானங்கள் குறித்தும் அவரின் தந்தை ஜீவன்ஜி யாத்கிரி, தாயார் ஜீவன்ஜி தனலட்சுமி ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது, யாத்கிரி கூறியதாவது: சூரிய கிரகணத்தின் போது, மாற்றுத்திறனாளியாகவே தீப்தி ஜிவன்ஜி பிறந்தார். அப்போது, உதடு மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால், அவரை பார்க்கும் கிராமமக்கள் மற்றும் உறவினர்களும், தீப்தியை மனநிலை பாதித்தவர், குரங்கு என திட்டினர். அவரை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும்படி கூறினர். இன்று அவரின் வெற்றியை பார்க்கும் போது, அவர் நாட்டின் சிறப்பு மகள் என்பதை நிரூபித்து உள்ளார். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள். அவர் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை அளித்துள்ளார். இந்த பதக்கம் மூலம் அது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.தனலட்சுமி கூறியதாவது: தீப்தி ஜிவன்ஜி அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் சிலர் கேலி செய்யும்போது வீட்டில் வந்து அழுவார். அவரை சமாதானப்படுத்த அவருக்கு பிடித்தமானவற்றை செய்து கொடுத்து சமாதானப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subramanian
செப் 05, 2024 07:41

வாழ்த்துகள்


R.Gopu
செப் 04, 2024 23:48

இவர்களைப் போன்ற தங்க மங்கையர்கள்தான் பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.


Bala
செப் 04, 2024 22:49

Great Inspiration to many who feel / have inferiority complex. This is the only way one respond to detractors - not thru unnecessary words. May God Bless You with Many Such Success.


R Kay
செப் 04, 2024 22:24

அழகு என்றும் நிலையானதல்ல. நாளையே ஒரு எதிர்பாராத விபத்தினாலோ அல்லது நோயினாலோ, அழகு மாயமாகலாம். அப்படி அழகை இழந்ததால் நாம் யாரென்ற அடையாளம், நம் மற்ற திறன்கள், நம் நற்குணங்கள் இவை எவற்றையும் இழக்கப் போவதில்லை. நிலையற்ற அழகிற்கு தரும் முக்கியத்துவத்தை மனிதர்களின் நற்குணங்களுக்கு கொடுத்து அவர்களை நாம் கொண்டாட‌ வேண்டும். வயதான நடிகர், நடிகையர், 40+, 50+ IT ஊழியர்கள் தங்களை இளமையாக காட்டிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் அவர்களை‌ காமெடி பீசாகவே காட்டுகின்றன


nagendhiran
செப் 04, 2024 20:43

வெற்றியால் செருப்படி தந்ததிற்கு நன்றி தங்கையே


Ramesh Sargam
செப் 04, 2024 19:05

விமர்சனங்களை எதிர்கொண்டு, அவற்றை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையில் சாதித்து, இப்பவும் போட்டியில் சாதித்து வெண்கல பதக்கம் வென்ற தீப்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் சாதிக்கவேண்டும்.


ديفيد رافائيل
செப் 04, 2024 19:05

உறவினர்கள் எப்பவுமே இப்படி தான் கேவலமா இருப்பாங்க.


R. Venkatesan
செப் 04, 2024 18:53

மனம் விம்முகிறது.. வாழ்த்துக்கள் குழந்தையே


senthil
செப் 04, 2024 18:06

வாழ்த்துக்கள் தீப்தி ஜிவன்ஜி மிகப்பெரும்பான்மை குரங்குத்தனம் கொண்ட மெண்டல்கள் நிறைந்த இந்த உலகத்தில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் .... அவர்களுக்கு எது தெரியுமோ அதைத்தான் சொல்லி இந்த வீர நங்கையை காயப்படுத்தி இருக்கிறார்கள் . உருவ கேலி செய்யும் அற்பர்கள் இந்தியாவில் அதிகம் . இருபது வருடங்கள் இங்கிலாந்தில் இருக்கிறோம் . இப்படி ஒருவரை கேலி செய்து இங்கு பார்த்ததில்லை.


என்றும் இந்தியன்
செப் 04, 2024 17:48

இந்த மாதிரி ஆட்களைதான் உதாரண குழந்தைகள் என்பது. இன்னும் நன்றாக முயற்சி செய்து தங்க பதக்கத்தை வெல்வாய் குழந்தாய்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை