உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / +8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா? பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா? பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது 90 சதவீதம், இந்திய தொலைபேசி எண்களில் ஊடுருவல் செய்து, மேற்கொள்ளப்பட்டது தெரியவந்து, தடை செய்யப்பட்டன.அதன்பின், தங்கள் தந்திரத்தை மாற்றிய மோசடிக்காரர்கள், சர்வதேச எண்களிலேயே அழைக்கத் துவங்கி விட்டனர். எனவே, இந்திய தொலைபேசிக் குறியீடான +91 என்பதில் துவங்காத, முன்பின் தெரியாத சர்வதேச குறியீடுடன் துவங்கும் எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அதுபோன்ற அழைப்பை பெறுபவர்கள், 'சஞ்சார் சாத்தி இணையதளம்' அல்லது தொலைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்யலாம்.தற்போது மோசடிக்காரர்களின் அழைப்புகள், +8, +85, +65 என துவங்கும் எண்களில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பிரத்யேக குழு ஒன்றை அரசு அமைத்துஉள்ளது. சர்வதேச அழைப்பு வரும்போது, அதை சர்வதேச அழைப்பு என தொலைபேசி நிறுவனங்கள் குறிப்பிட்டு, வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nakkeerapuram Samy
டிச 27, 2024 09:27

நீ சொல்லாதே?


Vaijayanthi Parthasarathy
டிச 26, 2024 14:27

நன்றி


Balasubramanian P
டிச 25, 2024 22:55

கவனமாக இல்லை என்றாள் நமது பணம் வீணாக்கப்படும்


அப்பாவி
டிச 25, 2024 14:20

எல்லாம் இங்கேருந்து அங்கே காணலாம் குடியேறிய இந்திய வம்சாவளிகள்தான். அழகா தமிழ், இந்தி, இங்கிலீஷ், நு எல்லா இந்திய மொழிகளும் பேசுவாய்ங்க. திருட்டு இந்தியன்கள்.


nakkeerapuram Samy
டிச 27, 2024 09:28

அதை நீ சொல்லாதே


Joe Rathinam
டிச 25, 2024 12:54

+6285375244836, +918233301929, எனக்கு +919586512998, +18990892173, +919226417016, +918377084345 & +911244713083 ஆகிய தொலை பேசி எண்களில் இருந்து பண மோசடி அழைப்புகள் வந்தது. அவர்கள் மேலும் தகவலுக்கு ஒரு நம்பரை அமுக்க சொல்லும் போது நான் சுதாரித்துக் கொண்டு தொடர்பை துண்டித்து விட்டு அந்த எண்ணை தடுத்து அதைப் பண மோசடி செய்ததாக குறித்து விடுவேன். இந்த குற்றத்தை குறித்து இந்திய அரசின் வலைத்தளத்தில் ஹட்டப்ஸ்://சஞ்சாரசாதி.கோவி.இந்த/ஸஃக்/ஹோமோ/ஸஃக்-காம்ப்லின்ட்.ஜேசிபி மறையிடுவது மிகவும் சிரமமாக உள்ளது.


சி ரதி
டிச 25, 2024 11:45

எனக்கும் 13057675164, 1305704660..... நம்பரில் இருந்து டிசம்பர் 18- 23 வரை போன் வந்தது.நானும் ப்ளாக் செய்து உள்ளேன்.


Ganesh R
டிச 25, 2024 10:16

+691 மைக்ரோனேசியா என்று துவங்கும் எண்ணிலிருந்தும் வருகிறது. எனக்கு +69106830267 என்ற எண்ணிலிருந்து வந்தது.


Dharmavaan
டிச 25, 2024 09:20

எல்லாவற்றுக்கும் காரணம் கேடுகெட்ட கேட்பாரில்லாத நீதித்துறை


Kasimani Baskaran
டிச 25, 2024 08:36

சிங்கப்பூரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் கேடுகெட்ட ஜென்மங்கள் ... பெரும்பாலும் இந்த அழைப்புகள் கம்போடியா, மலேசியா போன்ற பின்தங்கிய நாடுகளில் இயங்கும் சைபர் பண்ணைகளின் அடைத்து வைக்கப்பட்ட சைபர் அடிமைகளை வைத்து செய்யும் கேடுகெட்ட வேலை இது.


Easwar Moorthy
டிச 25, 2024 07:57

+65 சிங்கப்பூர்


புதிய வீடியோ