உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை, ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது!

டில்லி சட்டசபை, ஈரோடு கிழக்கு தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் 70 தொகுதிகளுக்கு பிப்.,5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பிப். 8 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iu66zzi1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி.ராகுல் மற்றும் பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.இந்நிலையின் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

ஈரேடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஒய்ந்தது.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் தி.மு.க., மற்றும் நா.த.க., போட்டியிடுகின்றன. தி.மு.க., சார்பில் சந்திரகுமாரும், நா.த.க., சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரு கட்சிகளும் பிரசாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் இந்த தொகுதியிலும் பிரசாரம் ஓய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
பிப் 04, 2025 09:58

Both Elections & earlier Maharashtra are Murders of Democracy as Results already Decided by EVMs, its MasterRulers, Agent-Bureaucrats& 90%UnDue FreebiesAvailers. Indias Elections are Farce


J.V. Iyer
பிப் 04, 2025 04:32

சீமானின் ஈர வெங்காய ராவின் எதிர்ப்பு அதிமுகாவையும், திமுகாவையும் ஒன்றாக சேர்த்துவிட்டது. அதிமுக திமுகவுக்கு வோட்டளிக்கும். மொத்தம் சேர்த்தால் 20 விழுக்காடு வருமா? சீமானுக்கு 80 விழுக்காடு ஓட்டுக்கள் விழும். சீமானுக்கு முதல் வெற்றி.


Svs Yaadum oore
பிப் 03, 2025 19:46

...கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...மானமுள்ள தமிழன் இவர்களுக்கு வோட்டு போட மாட்டான் ....


Svs Yaadum oore
பிப் 03, 2025 19:44

ஈரோட்டில் பண மழை பொழிந்ததாம் .....இதுதான் வெத்து வேட்டு திராவிட கருத்தியல் மற்றும் தமிழ் தேசிய கருத்தியல் .....தமிழே எழுத படிக்க தெரியாத தற்குறி கும்பலையும் ஆபாச சினிமா பின்னால் அலையும் மூடர் கும்பலையும் உருவாக்கி டாஸ்மாக் பிரியாணி பணம் கொடுத்து வோட்டு வாங்குவதுதான் திராவிட மற்றும் தமிழ் தேசிய கருத்தியலாம் ....கோவையில் குண்டு வெடித்தது விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ....கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றி சொன்னவன் நாம் தமிழர் கட்சி தலைவன் ...


புதிய வீடியோ