உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சையை சேர்க்க முடியுமா?:சுப்ரீம் கோர்ட் கேள்வி

அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சையை சேர்க்க முடியுமா?:சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:தேசிய ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உட்பட பாரம்பரிய சிகிச்சை முறைகளை சேர்க்கக்கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாரம்பரிய முறை

ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை, மத்திய அரசு 2018ல் துவங்கியது. இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இதற்கிடையே, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், 'மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அலோபதி மருத்துவம் மற்றும் அது சார்ந்த மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.'இது, காலனித்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. நம் நாட்டில் பாரம்பரிய முறையில் அளிக்கப்பட்டு வரும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.'தற்போதைய காலகட்டத்தில், இத்தகைய சிகிச்சை முறைகள் நம் மக்களுக்கு அவசியம் தேவை. எனவே, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை சேர்க்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி கள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 09, 2024 13:03

கோவையில் உள்ள மருத்துவ மனைகளில் இந்த காப்பீட்டு திட்டம் ஏற்றப் படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக மாநில அரசின் அழுத்தம் காரணம் என்று கூறுகிறார்கள். மாநில அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டமே மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி பெற்று மாநில அரசின் திட்டமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டமாக செயல்படுத்த படுகிறது. ஆகவே இதற்கும் அது போல ஸ்டிக்கர் ஒட்டி முடியாததால் இத்திட்டம் செயல் படுவதில் தடை உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசுக்கு பெயர் புகழ் கிடைக்க கூடாது என்பதில் மாநில அரசு மிகக் கவனமாக அரசாட்சி செய்கிறது. தமிழக மக்கள் பாவம் செய்தவர்கள்.


Sridhar
நவ 09, 2024 11:32

நிச்சயமாக சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகள் இந்தியாவில் சேர்க்கப்படாமல் வேறெங்கு சேர்க்கமுடியும்? உடலுக்கும் உயிருக்கும் அவ்வளவு ஆபத்தான அல்லோபதி மருத்துவதையே நாம் ஒப்புக்கொள்ளும்போது, இயற்கையோடு இணைந்த நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை பேணிப்பாதுகாப்பதில் என்ன தயக்கம்? சீனாக்காரன் அவன் பாரம்பரிய மருத்துவத்தை விடுவதில்லை. ஜப்பான் கூட அப்படிதான். நாம் மட்டும் ஏன் இன்றுவரை வெள்ளையனுக்கு அடிவருடிக்கொண்டிருக்கிறோம்? இந்தியா அவ்வளவு கேவலமான நாடா?


அப்பாவி
நவ 09, 2024 07:17

லேகியமெல்லாம் எப்போதும் வேலை செய்யாது. சைட் டிஷ் சா சாப்புடலாம்.


Smba
நவ 09, 2024 04:53

இந்த அட்டை வேஸ்ட்டு எங்கயும் ஏற்கபடுவதில்லை வெத்து விளம்பரம்


Sambath
நவ 09, 2024 07:35

எங்கு ஏற்கவில்லை?


புதிய வீடியோ