உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலகு ரக வாகன உரிமம் உள்ளவர்கள் சரக்கு வாகனங்களை ஓட்டலாமா...: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

இலகு ரக வாகன உரிமம் உள்ளவர்கள் சரக்கு வாகனங்களை ஓட்டலாமா...: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7,500 கிலோ எடையுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு காப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்துவந்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், குறிப்பிட்ட விபத்தில் வாகனம் ஓட்டிய நபர் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தார். ஆனால், அவர் ஓட்டிச் சென்ற வாகனம் போக்குவரத்து வாகனம் என்பதால், அதற்கான காப்பீட்டு பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாக கூறப்பட்டு இருந்தது.இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இலகு ரக வாகனத்திற்கும், போக்குவரத்து வாகனத்திற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதற்காக தனித்தனி ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தாலும், இலகு ரக உரிமம் வைத்துள்ளவர்கள் 7,500 கிலோ வரை எடைகொண்ட வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி உள்ளது.சில வாகன விபத்துகளில் போக்குவரத்து வாகனத்தை இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் இயக்கி விபத்தில் சிக்கும்போது இதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பணத்தை வழங்க மறுப்பது சட்ட விரோதம் ஆகும் என தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anantharaman Srinivasan
நவ 06, 2024 22:56

ஆட்டோ டிரைவர் கூட கனரகவாகனத்தை ஓட்டலாம். மூன்று சக்கர வண்டியையே ஆட்டோ டிரைவர் ஓட்டும் போது நாலு சக்கரம் ஆறு டயர் லாரியை ஓட்டத்தெரியாதா என்றும் கோர்ட் கேட்கலாம்.


Anantharaman Srinivasan
நவ 06, 2024 22:49

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு.. கீழ் கோர்ட், மேல் கோர்ட், High court, suprem court எல்லாவற்றையும் கடந்த பின் super judgment.


Dharmavaan
நவ 06, 2024 20:29

இப்படி அறியாத விஷயங்களிலும் தலையிடும் கோர்ட் கண்டிக்கப்பட வேண்டும் கொலீஜியும் முறை நீக்குவது ஒன்றே வழி


தமிழ்வேள்
நவ 06, 2024 20:04

7.5 டன் எடை வரையிலான வண்டியை ஓட்ட ஆசை இருக்கலாம்..ஓட்டத்தெரிய வேண்டாமா? இந்திய சாலைகளைப் பற்றிய தெளிவு கோர்ட்டுக்கு இருக்கிறதா? ஓட்ட ஒரு பழக்கம் தகுதி வேண்டாமா? விபத்துக்கள் அதிகம் ஆகும்.. அப்போது கோர்ட் என்ன செய்யும்? கார் ஓட்டும் உரிமம் கூட சொந்த பயன்பாட்டுக்கானதை டூரீஸ்ட் கார்களுக்கு மஞ்சள் போர்டு பயன்படுத்த இயலாது.. அப்புறம் எப்படி இலகு ரக வணிக வாகனங்களை இயக்க செல்லுபடியாகும்?


GMM
நவ 06, 2024 18:38

தீர்ப்பு சரியே. காப்பீடு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். குறுகிய நாளில் தலைமை நீதிபதி ஓய்வு பெற இருப்பதால் வேறு அமர்வு தீர்ப்பு கூறி இருக்கலாம். எடப்பாடி 10.5 நிமிட பதவி காலத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஏற்புடையது அல்ல.


rama adhavan
நவ 06, 2024 18:31

நல்ல தீர்ப்பு. அசைவம் உண்பவர்கள் ஆடோ, மாடோ, கோழியோ சாப்பிட்டால் ஒன்றுதான், எல்லாம் இறைச்சிதான். அதேபோல் தான் இதுவும். 2 சக்கர லைசென்ஸ் உள்ளவர்கள் 100 சி சி 100 கி. ஓட்டினாலும் 500 சி சி 200 கி புல்லட் ஓட்டினாலும் ஒன்று தான்.


Dharmavaan
நவ 06, 2024 18:27

7500 கிலோ வரை என்பதை தீர்மானிக்க கோர்ட் டெக்கனிகல் எக்ஸ்பெர்ட்டா கேவலம் கேட்பாரில்லை, 7500 கிலோ என்பதே கனரகம் என்று தீர்மானிக்கப்பட்டதே.


Dharmavaan
நவ 06, 2024 18:24

எல்லா கொள்கை முடிவிலும் கோர்ட் மூக்கை நுழைக்குமானால் அரசு எதற்கு


rama adhavan
நவ 06, 2024 19:38

அப்பப்போ தப்பான கொள்கைகளில் மட்டும் தலையிடுகிறது. இதில் தவறில்லை.


Dharmavaan
நவ 06, 2024 20:26

டெக்னிகல் விஷயத்தில் தப்பு என்று தீர்மானிக்க கோர்ட் டெக்னிகல் மேதையா எதிலும் மூக்கை நுழைப்பது அரசு சட்டங்களை அவமதிப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் வரம்பு மீறிய செயல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை