உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்று சேர முடியுமா; பி.சி.சி.ஐ.,க்கு கடும் எதிர்ப்பு

பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்று சேர முடியுமா; பி.சி.சி.ஐ.,க்கு கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: இந்தியர்களின் நெஞ்சங் களை பதற வைத்த பஹல்காம் பயங்கவராத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்போட்டியை நாட்டுப்பற்றுமிக்க இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பி.சி.சி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. தற்போதும் பயங்கவாதத்திற்கு எதிரான 'சிந்துார் ஆப்பரேஷன்' தொடர்வதாக பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளனர்.

பணம் பிரதானம்:

ஆனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மட்டும் பாகிஸ்தானுடன் மறைமுக உறவு கொள்ள விரும்புகிறது. பணம் மட்டும் குறிக்கோளாக கொண்ட சில 'ஸ்பான்சர்கள்', ஒளிபரப்பு நிறுவனங்களும் துணை போகின்றன. ஆசிய கோப்பை தொடரில் வரும் 14ல் நடக்க உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி மூலம் பெரும் லாபம் பார்க்க முயற்சிக்கின்றன. பஹல்காம் தாக்குதலின் போது முதலை கண்ணீர் வடித்த சில அரசியல்வாதிகளும், பி.சி.சி.ஐ., செயலை கண்டிக்காமல் அமைதியாக உள்ளனர். வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். இம்முறை இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பாக உள்ளனர். பஹல்காம் தாக்குதலின் சோக நினைவுகள் நெஞ்சை உலுக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டியை ரசிக்க தயாராக இல்லை. பெரும்பாலான ரசிகர்கள் இந்தியா -பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்போம் என சமூக வலை தளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நாட்டுப்பற்று மிக்க ஒவ்வொரு இந்தியரும் இப்போட்டியை புறக் கணிக்க வேண்டும். அன்றைய தினம் 'டிவி'யை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இனவெறி பிரச்னை காரணமாக பல ஆண்டுகள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியுடன் இந்தியா விளையாடவில்லை. இதே போல பயங்கவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை பாகிஸ்தானுடன் எவ்வித கிரிக்கெட்டிலும் நாம் விளையாடக்ககூடாது என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

உறவு தேவையில்லை

இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் ஹர்பஜன் கூறுகையில்,''ஆப்பரேஷன் சிந்துாருக்குப் பின், இந்தியா-பாக்., இடையே இனி கிரிக்கெட், வர்த்தக உறவு வேண்டாம் என்றனர். நாங்கள் உலக 'லெஜண்ட்ஸ்' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை புறக்கணித்தோம். என்னைப் பொறுத்தவரை அரசியல், சமூக சூழலில் இரு தரப்பிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாத வரையில் கிரிக்கெட் போட்டிகள் தேவையில்லை,'' என்றார்.

இது முடியுமா

'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலின் போது, பாகிஸ்தான் பவுலர் பகிம் அஷ்ரப் போன்றோர் இந்திய ராணுவத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். இவர்களுடன் இந்திய வீரர்கள் எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Sivasubramanian S
செப் 14, 2025 10:08

VERY VERY FINE DICITION


Modisha
செப் 13, 2025 23:51

பேட்டிங் மட்டும் ஆடிவிட்டு பௌலிங் போட முடியாது என்று சொல்லி vida வேண்டும் .


ManiMurugan Murugan
செப் 13, 2025 23:35

ManiMurugan Murugan கார்கில் போரின் போது க் கூட உத்தி வைப்பு நடந்தது கறுப்பு கொடி காட்டிய நிகழ்வு நடந்தது கண்டிப்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் போட்டி முன்பே திட்டமிட்டது என்பதால் சில சட்ட த் திட்டங்கள் இருக்கலாம் ஆசிய ப் போட்டி கள் பாகிஸ்தானில் நடப்பதை தவிர்க்க வேண்டும் மக்கள் எதிர்ப்பு தெ ரி வி ப் பதில் தவறில்லை பிசிசிஐ மக்கள் உணர்வை புரிந்து ஆவன செய்யவேண்டும்


ராஜ்
செப் 13, 2025 21:50

BCCI க்கு பணம் மட்டுமே குறிக்கோள்


M.Sam
செப் 13, 2025 20:11

ஊமையாய் குத்தும் உண்மை குத்தும் ஒப்பிடமுடியுமா ?


சத்யநாராயணன்
செப் 13, 2025 16:15

இந்தியா எப்பொழுதும் எதிர்ப்பது பாகிஸ்தான் வளர்த்தெடுத்த தீவிரவாதிகளை மட்டும் தானே பாகிஸ்தானின் பொது மக்களையோ நாட்டையோ இல்லையே இந்தச் செய்தியை உலகத்திற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தவே இந்த முன்னெடுப்பா இருக்கும்


அசோகன்
செப் 13, 2025 14:09

இந்து சமய அறநிலைய துறைப்போல் உள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்...... பணம் மட்டுமே குறிக்கோள்


gopalakrishnan
செப் 13, 2025 13:30

பாகிஸ்தானுடன் விளையாட கூடாது. விளையாட்டில் பாலிடிக்ஸ் கூடாது என்ற லாஜிக் சும்மா.விரோதி விரோதிதான் எதிலும்.


Gnana Subramani
செப் 13, 2025 13:11

எதைக் கேட்டாலும், எல்லையிலே போர் வீரர்கள் கஷ்டப்படும் போது, என்று ஆரம்பிக்கும் ஜீ இதற்கு என்ன சொல்லுவார்.


Dv Nanru
செப் 13, 2025 11:38

பயங்கரவாதமும் தீவிரவாதமும் கொண்ட பாகிஸ்தானுடன் நாம் ஒருபோதும் கிரிக்கெட் விளையாட கூடாது நம்முடைய தேசத்தை பாதுகாக்க எல்லையில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நம் தேசத்தை பாதுகாத்து வருகிறார்கள் அவர்கள் அங்கே உணவு இல்லாமல் தூக்கத்தையும் துறந்து நமது தேசத்தையும் நமது மக்களுக்கு பாதுகாப்பை கொடுத்து வருகிறார்கள் அதற்கு துரோகம் செய்யக்கூடாது இந்த பிசிசிஐயின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதல் இன்றும் நம் கண் முன்னே நிற்கின்றது கண்ணீர் இன்னும் வடிந்து கொண்டே இருக்கின்றது அதை நாம் இன்னும் மறந்து விடக்கூடாது இந்த பிசிசிஐ யின் போக்கை பிசிசிஐ கைவிட வேண்டும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மிகக் கேவலமான கேள்விகளை கேட்டார்கள் நமது பாதுகாப்பு துறையின் மீது அவர்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை பாகிஸ்தான் மீது மிகச்சிறந்த பதிலடி தாக்குதல் தந்தது நம்முடைய பாதுகாப்புத் துறை தான் மிகத் துல்லியமாக தாக்கியது ஒரு சிறு சேதம் கூட இல்லாமல் பொதுமக்களை பாதிக்காமல் தாக்கியது நமது விமானப்படை இன்னும் சொல்லப்போனால் உலகத்திலேயே முதல் முறையாக அணு ஆயுதம் தயாரிக்கும் இடத்தை குறி வைத்து தாக்கிய பெருமை உலகிலேயே நமது விமானப்படையை சாரும் இப்போது இல்லை எப்போதுமே நாம் பாகிஸ்தான் கூட கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் அவர்கள் கூட விளையாட கூடாது அவர்கள் எப்போது இந்த தீவிரவாத செயல்களை விடுகிறார்களோ அதன் பிறகும் கிரிக்கெட் அவர்களுடன் விளையாட வேண்டுமா என யோசனை செய்து பிறகு தான் விளையாட வேண்டும் நமக்கு அப்படி ஒரு விளையாட்டு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை