உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்த முடியாது: கமல் வழக்கில் உத்தரவு

மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்த முடியாது: கமல் வழக்கில் உத்தரவு

தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அம்மாநில ஐகோர்ட் தடை விதித்ததை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'மன்னிப்பு கேட்குமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது; அது உயர் நீதிமன்றத்தின் வேலையும் அல்ல' என, உத்தரவிட்டது. கமல்ஹாசனும், மணிரத்னமும் சேர்ந்து தயாரித்த தக் லைப் திரைப்படம், ஜூன் 5ல் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம்' என்றார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. கமல் மன்னிப்பு கேட்டால் தான் படத்தை வெளியிடுவோம் என, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது; நான் தவறாக பேசவில்லை' என கூறிவிட்டார்.

சட்ட விரோதம்

இது வழக்காக மாறியது. விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி நாக பிரசன்னா, 'கமல் மன்னிப்பு கேட்டால் என்ன குறைந்து விடும்?' என்று கேட்டார். இது கன்னட அமைப்புகளுக்கு உற்சாகம் அளித்தது. இந்நிலையில், தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், 'குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் விருப்பத்தை அமல்படுத்துவதை ஏற்க முடியாது' என்றனர். கர்நாடகா அரசு வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் கர்நாடகா ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு இருக்கிறது' என்றார். இதை கேட்டதும் நீதிபதிகள் கோபம் அடைந்தனர். 'அதற்காக சட்ட விரோத விஷயங்களை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அந்த படத்துக்கு, சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. 'அதை வெளியிட அவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பாதுகாப்பது தான் அரசின் கடமை. படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என சிலர் மிரட்டினால், அரசு உடனே தடை செய்யலாமா?' என கேட்டனர்.

கண்டிப்பு

கர்நாடக அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு, 'பிரச்னை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை என, படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார்' என்றார். அதற்கு நீதிபதிகள், 'சென்சார் சான்றிதழ் பெற்ற பின் ஒரு படத்தை எவராலும் தடை செய்ய முடியாது. தயாரிப்பாளரை மிரட்ட எவருக்கும் உரிமை கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக 18ம் தேதி கர்நாடகா அரசு தன் பதிலை தெரிவிக்க வேண்டும்' என்றனர். கமல் மன்னிப்பு கேட்டால் பிரச்னை முடிந்து விடும் என கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சொன்னதை கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'சட்டப்படி எது சரியோ அதை சொல்வது தான் நீதிபதியின் வேலை. மன்னிப்பு கேள் என்று யாரையும் கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது. அது கோர்ட்டின் வேலை இல்லை” என கண்டிப்புடன் கூறினர். தக் லைப் திரைப்படம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sankar
ஜூன் 18, 2025 22:57

கன்னட மக்களுக்கு படம் வராவிட்டால் மக்கள் தப்பிப்பர் .கன்னட மக்களை காப்பற்ற இந்த கமலஹாசன் மன்னிப்பு கேட்கமாட்டான்


sankaranarayanan
ஜூன் 18, 2025 19:14

இந்த படம் தக்க வைத்துக்கொள்ள லைஃபே கிடையாது இதை பார்த்ததால் எதையும் தக்க வைக்கவே முடியாது ஆதாலால் .......... உங்களுடைய அபிப்பிராயத்திற்கு விட்டுவிட்டேன்


sankar
ஜூன் 18, 2025 16:18

யாகாவாராயினும் நாகாக்க -


Madras Madra
ஜூன் 18, 2025 14:40

இதுக்கு அப்புறம் பொண்ணு சமஞ்சா என்ன இல்லன்ன என்னா ? thug life டெத் ஆயி ஸ்பிரிட் ஆயிடுச்சி


Vijay D Ratnam
ஜூன் 18, 2025 14:25

கமல் அரசியலில் ஆழம் தெரியாம காலை விட்டவராக ஒரு அரசியல் காமெடியனாக இருந்தாலும், இந்திய சினிமாவின் ஐகான் கமல்ஹாசன். இந்திய திரை உலகிற்கு பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியவர். கமல் ஒரு பச்சை தமிழன், அப்படி அவர் என்ன சொன்னார், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்றார். உடனே அரசியல் ரீதியாக திட்டமிட்டு உசுப்பிவிடப்பட்ட கூலி போராட்டக்காரர்களை வைத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி, கொடும்பாவி கொளுத்தி, அவர் படத்தை செருப்பால் அடித்து அவர் பட போஸ்டரை கிழித்து அவர் தயாரித்த படத்தை கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் அவர் பிழைப்பை கெடுத்து அவருக்கு அதாவது ஒரு தொழில் அதிபருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்து இருக்கிறார்கள். கன்னட மக்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். இதே தமிழ்நாட்டில் ஈ.வே.ராமசாமி என்ற ஒரு கன்னடியன் ஒரு நூற்றாண்டுகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார். தமிழ் காட்டுமிராண்டி பாஷை, தமிழன் காட்டுமிராண்டி, திருக்குறள் தங்க தட்டில் வைத்த அசிங்கம். தமிழ் நீச மொழி. தொல்காப்பியன் மாபெரும் துரோகி, தமிழ்ப் புலவன் என்றால் புளுகன், சொந்தப் புத்தி இல்லாதவன், என்று பினாத்திய கன்னடியனை தமிழன் கொண்டாடவில்லையா. அதற்காக கமலிடம் கர்நாடகா மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டியதில்லை. அவரது தயாரிப்பான படத்தை தடை செய்ததற்கு, அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு, அவருக்கு ஏற்படுத்திய நஷ்டத்துக்கு, கர்நாடகா அரசுக்கு வரவேண்டிய வரியை தடுத்த குற்றத்திற்காக கமல்ஹாசனுக்கு நூறு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். இதை தண்டிக்காமல் விட்டால் போராட்டம் என்கிற பெயரில் பொறுக்கிப்பயலுவோலாம் ரவுடித்தனத்தில் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள்.


நிவேதா
ஜூன் 18, 2025 15:44

கன்னடனை தமிழின தந்தையாக கொண்டாட எந்த கன்னடரும் வற்புறுத்தவில்லை. சில தமிழர்கள் தூக்கி வைத்து ஆடுவதற்கு கன்னடத்தவர் எப்படி பொருப்பாவர் ? மேலும் இந்த படத்துக்கு கன்னட அரசு திரையிட தடை விதிக்கவில்லை.ஆனால் பாதுக்காப்பு தர முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான போலீசை குவித்து பாதுகாப்பு தர ஒரு பட ரிலீஸ்க்காக கேட்பது முறையான ஒன்றா என எண்ணிப்பாருங்கள். கமல் இந்த விஷயத்தில் செய்த தவறே நீதிமன்றம் சென்றதுதான். அவர் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கர்நாடகாவில் அந்த அரசு மூலமாகவே அந்த போராட்ட அமைப்புகளோடு பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம். ஆனால் கமல் எதிர்பார்த்தது இந்த மொழிபிரிச்சனையால் தமிழகத்தில் வசூல் மழை பெய்யும் என் தப்புகணக்கு போட்டதே. மேலும் கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்புக்கு எதற்கு கர்நாடக அரசு கமலுக்கு இழப்பீடு தர சொல்கிறீர்கள் என புரியவில்லை.


நிவேதா
ஜூன் 18, 2025 16:13

நீங்கள் நினைப்பது போல் கமல் மட்டும் தயாரிப்பாளர் அல்ல. உதயநிதியும் இந்த படத்தின் தயாரிப்பாளரே. கமல் மற்றும் உதய் நினைத்திருந்தாலே பப்பு வரை தீர்வுக்காக பேச முடியும். அவர்கள் எதிர்பார்த்தது தீர்வல்ல, பிரச்சனையை.


நிவேதா
ஜூன் 18, 2025 12:20

அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்? திரை அரங்குகள் படத்தை வெளியிட மறுக்கின்றன என வினயோகிஸ்தர் உச்ச நீதிமன்றம் போவார். திரையரங்குகள் படத்தை வெளியிட வேண்டும் என கோர்ட் சொல்லும். பார்க்க யாரும் வரவில்லை என திரையரங்க முதலாளிகள் கோர்ட் போவார்கள். மக்கள் படத்தை பார்க்கவேண்டும் என தீர்ப்பு சொல்லும். மக்கள் எங்களிடம் பணம் இல்லை என கோர்ட் போனால் மக்களுக்கு படத்தை ஓசியாக ஒட்டி காட்ட வேண்டும் அந்த இழப்பீட்டை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொன்னாலும் சொல்லலாம்


Narasimhan
ஜூன் 18, 2025 12:05

இந்த ஆளு பேசுவது யாருக்குமே புரியாதே. நீதிபதிகளுக்கு எப்படி புரிந்தது.


M S RAGHUNATHAN
ஜூன் 18, 2025 12:03

In the eyes of SC, creating tension between two states over the parentage of two languages which may lead to violent pros is a small thing and does not require any decision, knowing fulwell that Kamala Hasan is not a linguistic research scholar. He can be let off. But poor Nupur Sharma for quoting verbatim verses from Quaran and Hadiths in support of her defence in a TV debate drew sharp reaction and comments from SC judges. In that case, Nupur only asked for merging all the cases filed against by Islamic fundamentalists be clubbed and transferred to a court in Delhi. Instead of addressing the petition and the relief sought by the petitioner, the SC virtually branded her as a criminal that she is fanning violence between two communities. I am at a loss about the positions taken by judges in two cases which are very similar in nature.


நிவேதா
ஜூன் 18, 2025 11:44

அனுமதி கொடுத்த நீதிபதியை இந்த படத்தை நாலு தடவை பார்க்க வைக்கணும். விடுமுறை கால கோர்ட் எதுக்கு அவசரமா விசாரிக்கணும் என உயர்நீதிமன்றங்களை கேட்கும் உச்சநீதிமன்றம் இப்போது விடுமுறையில் இதை ஒரு அவசர வழக்காக ஏன் விசாரிக்கிறது என தெரியவில்லை. படம் வெளிவரத்திற்கு முன்னாடி இதை உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக விசாரித்திருந்தால் சரி. படம் வந்து 2 வாரம் ஆகி விட்டது. இப்போது எதுக்கு இதை அவசரமாக விசாரிக்க வேண்டும்?


lana
ஜூன் 18, 2025 11:00

சரி இதே உச்ச நீதிமன்றத்தில் பப்பு மன்னிப்பு கேட்டு தண்டனை இல் இருந்து தப்பலாம் தப்பே இல்லை. ரஃபேல் வழக்கில் என்ன நடந்தது. நுபுர் ஷர்மா வழக்கில் என்ன நடந்தது. இப்போது bothi மரம் எதுவும் கிடைத்தது விட்டதா