உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா

25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால், அந்த உத்தரவை ஏற்று புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு துவக்கி உள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்க பள்ளி தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், இந்த நியமனத்தை ரத்து செய்தது.இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் சஞ்ச் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோல்கட்டா ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தனர்.அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முறைகேடு நடந்து உள்ளது. அதன் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வத் தன்மை மீறப்பட்டு உள்ளது. ஐகோர்ட் உத்தரவில் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை. நியமனங்கள் அனைத்திலும் மோசடி நடந்துள்ளது எனத் தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில், எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீதிபதிகள் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதேநேரத்தில், மனிதாபிமான அடிப்படையில் எனது கருத்தை நான் பதிவு செய்கிறேன். தவறான தகவலை கூறாதீர்கள். குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன. சிலர் செய்த தவறுக்காக அனைவரையும் தண்டிப்பது ஏன்? 25 ஆயிரம் பேர் மட்டும் பாதிக்கப்படப்போவது கிடையாது. அவர்களின் குடும்பமும் பாதிக்கும்.நீதிபதி வீட்டில் பணம் சிக்கினால், அவர் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்படுகிறார். ஆனால், தேர்ச்சி பெற்றவர்களை இடம் மாற்றம் செய்யக்கூடாது. இந்த உத்தரவை முதலில் வழங்கிய நீதிபதி தற்போது பா.ஜ., எம்.பி., ஆக உள்ளார். இந்த விவகாரத்தில் பா.ஜ.,வும் கம்யூனிஸ்ட் சதி செய்து உள்ளன. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ameen
ஏப் 06, 2025 15:35

நீங்க சொல்வதை பார்த்தால் உள்துறை அமைச்சர் தன் ப்ணியை கவனிப்பது இல்லை என தெரிகிறது....


Kasimani Baskaran
ஏப் 04, 2025 04:00

குப்புற விழுந்துவிட்டு நாங்கள் சந்தனத்தில்தான் விழுந்தோம் என்று மார் தட்டுவது போல் இருக்கிறது... மிகவும் சிறப்பு. இதே போல பணத்துக்கு அரசு பதவியை விற்ற தீம்காவுக்கும் மண்டகப்படி கிடைக்கவேண்டும். மாநில நீதித்துறை தீமகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது நடக்க சிறிது காலம் பிடிக்கும்...


Anantharaman Srinivasan
ஏப் 04, 2025 00:17

மம்தா Double game ஆடுகிறார்.


aaruthirumalai
ஏப் 03, 2025 23:16

நம்ம முருகன்திருப்பதி அமைச்சர் கதை மாதிரில இருக்கு


S. Venugopal
ஏப் 03, 2025 23:05

மேற்கு வங்கத்தில் மட்டும் அல்ல உலகத்த்தில் எல்லா இடங்களிலும் உள்ள அலுவலகங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் சிண்டிகேட் ஒன்றை அமைத்துக் கொண்டு தனக்கு வேண்டியவர்களையும் தனது சொந்தக்காரர்களையும் மட்டுமே மிக சிறிய வேலையில் இருந்து மிகப்பெரிய பதவி வரை வைப்பதே ஒருசாரரின் தொழில். தகுதி மற்றும் திறமை இருந்தாலும் வேலை, சிபாரிசின் அடிப்படையில் தான் என்று பலர் கூறுகிறார்கள். இவர்கள் வேலையில் வைத்தவர்களிடம் மாதா மாதம் ஒரு கணிசமான தொகையினை இந்த சிண்டிகேட் கறந்துவிடும் என சிலர் புலம்புவார்கள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் இவர்கள் திருந்தி இந்த சிண்டிகேட்டை ஓரம்கட்டி தகுதியின் அடிப்படையில் வேலைக்குத் தேர்ந்த்தெடுத்தால் நன்று.


Iyer
ஏப் 03, 2025 22:29

1 கோடி பங்களாதேஷிகளும், + ரொஹிங்கியாக்களும் - மற்றும் SECULAR பித்து பிடித்த ஹிந்துக்களும் மேற்கு வங்கத்தில் உள்ளனர். அதுவரை மம்தாவை வீழ்த்த முடியாது. மேற்குவங்கத்தில் 10 வருடம் ஜனாதிபதி ஆட்சி பிறப்பித்து - சட்டவிரோத பங்களாதேஷிகளை விரட்டியபின் தான் தேர்தல் நடத்தணும்


Kannan Chandran
ஏப் 03, 2025 22:08

செந்தில்பாலாஜி செய்ததும் இதே மாதிரியான திருட்டுத்தனமே,


Rangarajan Cv
ஏப் 03, 2025 21:52

If she doesn't implement the court order it will be anarchy


Oru Indiyan
ஏப் 03, 2025 21:22

மேற்கு வங்க மமதையும் திராவிடியா பசங்களும் இந்தியாவை துண்டு போட நினைக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 21:12

லஞ்சம் கொடுத்த 25000 பேரையும் அமலாக்கத்துறை பிடிச்சு லஞ்சம் பெற்ற எல்லா அரசியல்வாதிகளையும் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு நடத்தி... நடக்கிற காரியமா? அணில் வழக்குல 2000 சாட்சிகளை விசாரிக்கப் போறதா தமிழ்நாடு போலீஸ் சொல்லுவதயே நா‌ங்க‌ நம்பல. போங்கப்பா போங்க


சமீபத்திய செய்தி