உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1271 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கேன்வா நிறுவனம்

1271 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கேன்வா நிறுவனம்

- நமது சிறப்பு நிருபர் -வேலையிழப்புகள் மிகவும் கொடுமையானவை. ஒரு நாள் உங்களுக்கு வேலை இருக்கும், மறுநாளே நீங்கள் மீண்டும் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக, முன்னணி ஐடி நிறுவனங்கள் கூட பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகளவில் 1271 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் சில பேருக்கு வேறு இடத்தில் பணி வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி இந்த ஆண்டு முதன்முறையாகக் குறைந்துள்ளது.இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கையை நிறுவனம் கையில் எடுத்தது. இந்தியா உட்பட 37 நாடுகளில் இந்த தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5700 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.நிறுவனத்தின் 13 ஆண்டு கால வரலாற்றில் இதுவே மிகவும் கடினமான முடிவு என்று கேன்வா நிறுவனத்தின் சிஇஓ மெலனி பெர்கின்ஸ் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சலுகைகளை அறிவித்தது.* குறைந்தபட்சம் 6 மாத கால சம்பளம் வழங்கப்படும். அடுத்த 12 மாதங்களுக்கான மருத்துவக் காப்பீடு நீட்டிக்கப்படும்.* ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆபீஸ் மேக்புக் லேப்டாப்களை அவர்களே வைத்து கொள்ளலாம்.* சொந்தமாக ஸ்டார்ட்-அப் அல்லது புதிய தொழில் தொடங்க விரும்பும் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் டாலர் (ரூ.8.4 லட்சம்) வரை நிதியுதவி வழங்கப்படும்.* புதிய வேலை தேடுவதற்கு ஏதுவாக 'Alumni Directory', லிங்க்ட்இன் பிரீமியம் சந்தா, தொழில்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும்.* கேன்வா நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 04, 2026 21:08

வர்ர பணத்தை வெச்சு சாய், சமுசா கடை போடுங்க. வேலை, வருமானம் நிரந்தரம்.


தாமரை மலர்கிறது
நவ 04, 2026 19:32

இந்தியாவின் பொருளாதார பொற்காலமிது. இந்திய இளைஞர்கள் ஏஐ கண்டு பயப்படத்தேவை இல்லை. ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது. சோம்பேறிகளுக்கு தான் வேலை இல்லை.


Ramesh Sargam
நவ 04, 2026 13:24

வேலையிழப்புக்கள் கொடுமையானவை. அதுவும் ஆண்களுக்கு அது மிக மிக கொடுமையானவை. ஒரு ஆண் பணியில் இருந்து சம்பாதிக்கும் பொது அவனுக்கு கிடைக்கும் மரியாதை, அவன் வேலையிலிருந்து ஓய்வுபெற்றபின், அந்த மரியாதை கிடைப்பதில்லை. அதுவும் அவனுக்கு பென்ஷன் இல்லையென்றால், அவனுக்கு வீட்டில் அவன் பெண்டாட்டியிடமிருந்து தினம் தினம் டென்ஷன்தான். அதைவிட கொடுமை வேறென்னவேண்டும் ஒரு ஆணுக்கு.


புதிய வீடியோ