உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெல்லூரில் வீட்டிற்குள் புகுந்த கார்: மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

நெல்லூரில் வீட்டிற்குள் புகுந்த கார்: மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் கட்டுப்பாட்டை இழந்து கார் வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 மருத்துவ மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நாராயணா மருத்துவ கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், புச்சிரெட்டிபாளையம் பகுதியில் நடந்த நண்பரின் சகோதரிக்கு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.கார், கோவூர் மண்டல் பகுதியில் மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வீட்டிற்குள் புகுந்தது. இதில், இச்சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் வெங்கட ரமணய்யா(50) என்பவர் உயிரிழந்தார்.மேலும் காரில் பயணித்த, ஜீவன், விக்னேஷ், நரேஷ், அபிசாய் மற்றும் அபிஷேக் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் மவுனித் ரெட்டி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 01, 2025 07:08

வூட்டுக்குள்ளே இருந்தாலும் தேடி வந்து போட்டுத் தள்ளும் கதி சக்தி. கண்டவனுக்கு கார் வித்து வளர்ச்சியோ வளர்ச்சி.


m.arunachalam
ஏப் 30, 2025 20:21

கண்ணியமான மருத்துவ மாணவர்கள் .


Sudha
ஏப் 30, 2025 19:52

தண்ணியில இருந்தாங்களா இல்லையா, முதல் கேள்வி


சமீபத்திய செய்தி