உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்பாவு மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

அப்பாவு மீதான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

புதுடில்லி; கடந்த 2023ல், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ''தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்தனர். ''தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், அதை ஏற்க மறுத்து விட்டார். அதனால் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் சேரும் நிகழ்வு நடக்கவில்லை,'' என தெரிவித்திருந்தார்.சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு, அ.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால், சபாநாயகர் அப்பாவு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பாபு முருகவேல், அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அப்பாவுவின் கோரிக்கையை ஏற்று, அவர் மீதான அவதுாறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajagopalan R
நவ 28, 2024 13:47

கோர்ட்டில் ஆளுக்கு தகுந்த தீர்ப்பு கிடைக்கிறது.. கோல் செகிரேட்டரியை எல்லோரும் நேர்மையான அதிகாரின்னு சொன்னங்க ஆனால் எல்லா கோர்ட்டிலும் அவர் குற்றவாளி . பொன்முடி வழக்கில் கோர்ட் அவரை குற்றவாளின்னு சொல்லி தன் தீர்ப்பையே நிறுத்தி வைத்து உதவியது. சட்டப்படி சரியாக இருக்கலாம் மாறல்லி சரியா தெரியலை .உச்ச நீதிமன்றம் அப்பீலில் தண்டனை நிறுத்தியது . கேஸ் ஜன்மத்துக்கு வாராது . மினா


s chandrasekar
நவ 28, 2024 11:17

சரியான நடவடிக்கை. இந்த வழக்கை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும்.


sankaranarayanan
நவ 28, 2024 09:17

தமிழக சபாநாயகர் அப்பாவு ஒரு கட்சித்தலைவராகவே தன்னை பாவித்துக் கொண்டு எங்குமே அறிக்கை விடுவது பேசுவது வழக்கமாக இருக்கிறது சபாநாயகள் வெளியிலும் சரி சபைக்குள்ளும் சரி, ஒருதலை பட்சமாக இருக்கவே கூடாது. சபாநாயகர் பதவியை துறந்துவிட்டு அவர் ஒரு அமைச்சராகவே ஆகலாம்


W W
நவ 28, 2024 08:33

பல்லக்கு ஏறுவதும் வாயாலேயே பல்லாகிலிருந்து விழுவதும் வாயாலேயே


சமீபத்திய செய்தி