உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேராசிரியைக்கு தொல்லை 5 பேராசிரியர் மீது வழக்கு

பேராசிரியைக்கு தொல்லை 5 பேராசிரியர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு பல்கலை யில் பணியாற்றிய பேராசிரியைக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பெங்க ளூரு, ஞானபாரதியில் பெங்களூரு பல்கலை உள்ளது. இங்கு, சமூகவியல் துறையில் 45 வயது பெண், ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியையாக பணியாற்றினார். இ வர், சமூகவியல் துறை பேராசிரியர் ராமஞ்சநேயா, மற்ற துறைகளின் பேராசிரியர்கள் ஸ்வரூப் குமார், ரங்கசாமி, ஜெகநாத், சிவராம் ஆகிய ஐந்து பேரும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 17ம் தேதி ஞானபாரதி போலீசில் புகார் செய்தார். புகாரின்படி, ஐந்து பேராசிரியர்கள் மீதும் வழக்கு பதிவானது. இதற்கிடையில், குற்றச்சாட்டுக்கு ஆளான ஐந்து பேராசிரியர்களும் மது குடித்தபடி காரில் பயணம் செய்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏ ற்படுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சிந்தனை
செப் 21, 2025 16:33

50 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளவே முடியாது பள்ளிக்கூடம் கோவில் திருவிழாக்கள் எங்கும் தனித்தனியாக தான் நடக்க வேண்டும் அமர வேண்டும் அப்படி இருந்தவரை பிரச்சினை இல்லை அதை காட்டுமிராண்டிகளின் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது பைக்கில் கட்டி பிடித்துக் கொண்டு போகலாம் அது நாகரீகம் என்று சொல்ல வேண்டியது பிறகு இதுபோன்ற வழக்குகளை எல்லாம் கொண்டு வந்து ஆண்களை கொடுமை செய்ய வேண்டியது இதெல்லாம் என்ன அறிவாளித்தனமோ தெரியவில்லை


Perumal Pillai
செப் 21, 2025 09:52

கண்ணால் காண்பதும் பொய் .காதால் கேட்பதும் பொய். எனக்கு என்னவோ இந்த பொம்பளை மீது தான் சந்தேகம். ரொம்ப காலம் வண்டி ஒழுங்காதான் ஓடியிருக்கும் போல தெரியுது. திடீர் என வண்டி தடம் புரண்டு விட்டது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 07:47

படிப்பு மட்டுமே ஒழுக்கத்தைத் தராது ன்னு புரியுது.. அக்கால வழக்கப்படி ஆசிரியப் பணிக்கு குறிப்பிட்ட வகுப்பாரை நியமிப்பது நல்ல தலைமுறைகளை உருவாக்குமோ என்கிற கேள்வியும் எழுகிறது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை