உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர் மோகன் பாபு மீது வழக்கு

பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர் மோகன் பாபு மீது வழக்கு

ஹைதராபாத், சொத்து தகராறு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள ஜலப்பள்ளி என்ற இடத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, 72, வசித்து வருகிறார். இவருக்கும், இவரது இளைய மகனும், நடிகருமான மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இது தொடர்பாக, இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். நடிகர் மோகன் பாபுவின் அழைப்பின்படி, சொத்து தகராறு குறித்த செய்தியை சேகரிக்க, ஜலப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தியனம் இரவு பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போது, அவரது மகன் மஞ்சு மனோஜும் அங்கு வந்தார். நடிகர் மோகன் பாபுவின் பாதுகாவலர்கள் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்த மஞ்சு மனோஜ், வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் சென்றார். அந்த சமயத்தில், சில பத்திரிகையாளர்களும் உள்ளே சென்றனர். வீட்டு வளாகத்தில் இருந்த நடிகர் மோகன் பாபுவிடம், பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபமடைந்த மோகன் பாபு, பத்திரிகையாளரின் மைக்கை பிடுங்கி அவரது தலையில் தாக்கினார். இதில் பத்திரி கையாளர் காயமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. காயமடைந்த பத்திரிகையாளருக்கு, கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் மோகன் பாபுவுக்கு சம்மன் அனுப்பினர்.இந்நிலையில் நேற்று நடிகர் மஞ்சு மனோஜ் கூறுகையில், ''சொத்து தகராறு தொடர்பான விபரங்களை விரைவில் வெளியிடுகிறேன்; பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.இதற்கிடையே, ஹைதராபாதில் உள்ள பிலிம் சேம்பர் அலுவலகம் முன், பத்திரிகையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நடிகர் மோகன் பாபு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யக் கோரிய அவர்கள், திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சங்கத்தின் தலைவராக, நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகனும், நடிகருமான மஞ்சு விஷ்ணு உள்ளார். இச்சம்பவத்துக்கு பின், உடல் வலி, உயர் ரத்த அழுத்தம், கழுத்து வலி போன்ற பிரச்னைகளுடன் நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Narayanan
டிச 12, 2024 14:34

பத்திரிக்கை காரர்கள் என்றாலே எல்லா சுதந்திரமும் அவர்களுக்கு இருப்பதாக நினைத்து செயல்படுகிறார்கள் . எடக்கு முடக்காக கேள்விகேட்பது. உடனே பதில் வேண்டும் ஆனால் எதிராளி அமைதியாகத்தான் பதில் சொல்லவேண்டும் .


kulandai kannan
டிச 12, 2024 11:28

துடஷ்டனைக் கண்டால் தூர விலகு. பத்திரிக்கை பேட்டி என்றால் மறுத்து விடு.


ஆரூர் ரங்
டிச 12, 2024 11:00

இதே போல் பத்திரிக்கையாளர்கள் குடும்ப உட்தகராறில் மோகன்பாபுவை தலையிட விடுவார்களா? இந்த அனைத்து RSB ஊடக ஆட்கள் மீதும் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப் பதிய வேண்டும்.


veeramani
டிச 12, 2024 10:14

ஏம் பா பத்திரிக்கை கார்பொரேட் புரோக்கர்கலே...நிருபர்கள் நாட்டில் ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. ஒரு நடிகரின் வீட்டில் என்ன நடந்தால் உங்களுக்கு என்ன? அவர்களது வீட்டிற்குள் சென்று நடப்பதை படம் எடுப்பேர்கலோ...நல்ல வேலை அவர் மைக் இடுக்கி அடிக்கத்தான் அச்டின் கொடுத்தார். தெற்கத்தி தமிழ்நாட்டில் வேறு ஒன்றுதான் பேசும்


முருகன்
டிச 12, 2024 09:35

நாட்டில் பல பிரச்சனைகள் வெளியே தெரியாமல் இருக்கும் போது தனிப்பட்ட ஒருவரின் குடும்ப பிரச்சனையில் ஆர்வம் காட்டி பிரபலமாக நினைத்தால் இப்படி தான் இருக்கும்


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 09:06

எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதும் நாகரீகம் இல்லாமல் பேசுவதும் தவறே , இங்கே நீங்க மோகன்பாபுவை பற்றி மாத்திரம் குறிப்பிட்டுள்ளீர்கள் ,அந்த வேஸ் பத்திரிகையாளன் என்ன கேள்விகளை தொடுத்தான் என்று கூறவே மாட்டீர்கள் ஊடகத்துறையினரே


Nandakumar Naidu.
டிச 12, 2024 07:01

அனுமதியில்லாமல் ஒருவர் வீட்டிற்க்கு நுழைவது தவறுதான். பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு இது தவறு என்று தெரியாதா?


Kasimani Baskaran
டிச 12, 2024 06:08

ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக செய்தி சேகரிப்பது போல அநாகரீகமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.


சமீபத்திய செய்தி