மேலும் செய்திகள்
ஐஸ்வர்யாவிடம் பணம் பெற்றாரா காங்., - எம்.எல்.ஏ.?
02-Jan-2025
ஆர்.ஆர்.நகர்:
உள்ளது.பெங்களூரு ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா. காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, சந்திரா லே- அவுட்டில் உள்ள, நகைக்கடையில் 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐஸ்வர்யா மீது சந்திரா லே - அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.பெண் டாக்டர் ஒருவரிடம் 2.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஆர்.ஆர்., போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர்யா மீது இரண்டாவது வழக்கு பதிவானது. மேலும், மாண்டியாவை சேர்ந்த தம்பதியிடம் ௧ கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மாண்டியா டவுன் போலீஸ் நிலையத்தில் மூன்றாவது வழக்கு பதிவானது. இரண்டாவது, மூன்றாவது வழக்கின் விசாரணைக்கு ஆஜராகி ஐஸ்வர்யா விளக்கம் அளித்தார்.இந்நிலையில், டாக்டரான தயானந்தா லிங்ககவுடா என்பவர், ஐஸ்வர்யா மீது ஆர்.ஆர்.நகர் போலீசில் அளித்த புகாரில், 'காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி என்னிடம் ஐஸ்வர்யா பேசினார்.நாங்கள் ஒரு நிறுவனத்தை திறந்து உள்ளோம். இந்த நிறுவனத்தில் நீங்கள் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பி 1 கோடி ரூபாய் பணம் முதலீடு செய்தேன். ஆனால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. பணத்தை திரும்ப தரும்படி கேட்டால் ஐஸ்வர்யா எனக்கு மிரட்டல் விடுகிறார்' என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Jan-2025