ரன்யா பற்றி ஆபாச கருத்து; பா.ஜ., எத்னால் மீது வழக்கு
பெங்களூரு; தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் பற்றி ஆபாச கருத்து தெரிவித்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது வழக்கு பதிவாகி உள்ளது.துபாயில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ், 33 சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு குறித்து விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கருத்து தெரிவிக்கையில், 'தங்கம் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது. ரன்யா தனது உடலில் மறைத்து வைத்து, தங்க கட்டியை கடத்தி உள்ளார்' என்றார். மேலும் ரன்யா பற்றி ஆபாச கருத்தையும் கூறி சர்ச்சையில் சிக்கினார்.இதுதொடர்பாக எத்னால் மீது பெங்களூரு ைஹகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் அகுலா அனுராதா என்ற பெண் புகார் செய்தார். அந்த புகார் அடிப்படையில் எத்னால் மீது பி.என்.எஸ்., சட்டம் 79 - பெண்ணின் அடக்கத்தை அவமதிப்பது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.