உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

நீதிபதி யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடாக சம்பாதித்த பணத்தையே நீதிபதி வர்மா பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது; அதை அவர் மறுத்தார். எனினும், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்தார். அங்கு அவருக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.மேலும், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, டில்லி தீயணைப்பு படை தலைவர் அதுல் கார்க் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, 'இம்பீச்மென்ட்' எனப்படும், பணி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக., 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பணி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணைக் குழு அமைக்கப்படும்.இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பணி நீக்க தீர்மானம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பணி நீக்க தீர்மானம் எளிதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ganesh Subbarao
ஜூலை 10, 2025 14:07

அரசியல் அமைப்பு கான்ஸ்டிடூஷன் அப்படித்தான் சொல்லுது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள். சும்மா ஒண்ணுமே தெரியாம கமெண்ட் மட்டும் அடிச்சா போதாது. விஷயமும் தெரியணும்.


K.n. Dhasarathan
ஜூலை 09, 2025 21:11

அப்போ இன்னும் இந்த நீதிபதி பதவியில் இருக்கிறாரா ? அட கடவுளே அப்போ தணடனை எப்போ ? நீதிபதிகளுக்கு வேறு சட்டமா ? சாதாரண மக்களுக்கு வேறு சட்டமா ? ஏன் ?பாராளுமன்றத்தில் உடனடியாக இம்பீச்மென்ட் கொண்டுவராதா இந்த அரசு ? என்னய்யா ஆட்சி ?


sekar ng
ஜூலை 09, 2025 19:00

ஒர் ஊழல் நீதிபதியை நீக்க பார்லிமென்ட் கூட்ட வேண்டியிருக்கு. நீதி மன்றத்திலே நீதியில் பேதம்,


GMM
ஜூலை 09, 2025 18:29

நீதிபதிகள் ஜனாதிபதியின் ஊழியர்கள் அல்ல. எஜமானர் - -வேலைக்காரர் உறவும் அல்ல. இந்த வாக்கியம் தேவையில்லை. President of India கட்சி சொசைட்டி president கிடையாது. அப்படி என்றால் வழக்கில் சிக்கும் மக்கள் கதி? தீர்வு சொன்ன நீதிபதி மீது ராணுவம் அறை நடவடிக்கை எடுத்து, ஒழுங்கு படுத்த வேண்டும். நீதிபதி மகாதேவன் மற்றும் யஷ்வந்த் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஜனாதிபதியை, கவர்னரை காக்க முடியவில்லை என்றால் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை காக்க முடியாது? மக்களை மிரட்டும் மன்றம்? தகவல் வேதனை தரும்.


venugopal s
ஜூலை 09, 2025 18:03

நியாயமான ,நேர்மையான செயல்களுக்கு எல்லோரும் கட்சி பேதமின்றி எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்!


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜூலை 09, 2025 18:34

200 வேணு நியாயம் பற்றி எல்லாம் பேசுறார்...என்ன கதறினாலும் 200 இரு நூறு தான்


venugopal s
ஜூலை 09, 2025 18:03

நியாயமான ,நேர்மையான செயல்களுக்கு எல்லோரும் கட்சி பேதமின்றி எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்!


சிட்டுக்குருவி
ஜூலை 09, 2025 18:01

மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது .மக்களாட்சி தத்துவத்தில் யாவரும் நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல .சில பொறுப்பான பதவிகளில் அவர்கள் வகிக்கும் பதவிக்கு வீண் தொந்தருவகள் கொடுத்து அவர்கள் செய்யும் மக்கள் பணிக்கு இடைஞ்சூறு விளைவிப்பதை தடுக்கவே அவர்கள் பதவி காலங்களில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது .நீதிபதிகள் தங்கள் பதவியை எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சி பணிசெய்ய கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது .அரசு வழக்கு பதிவு செய்யவோ அல்லது பதவி நீக்கும் உரிமையோ இருந்தால் அரசுக்கு பயந்து அரசுக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்க நேரிடும் .அதனால் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா பிரதிநிதிகளின் பணங்களிப்போடு ஆராய்ந்து பதவிநீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது .குற்றம் புரிந்தவர் பதவிநீக்கம் ஆனபிறகு அவர் ஒரு சாதாரண குடிமகனாகிறார் .அதற்கப்புறம் அவர் செய்தகுற்றங்களுக்கு சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் .தவறு நிரூபணம் ஆகும்பட்சத்தில் தகுந்த தண்டனையும் கிடைக்கும் .


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 20:57

சிட்டுக்குருவி க்கு தோன்றிய ஞானோதயம்


Perumal Pillai
ஜூலை 09, 2025 17:52

ஒரு திருடனை பிடிப்பதற்கு இவ்வளவு கஷ்டமா ? மாட்டாமல் இருக்க எவ்வளவு சட்ட தடுப்பு போட்டு வைத்திருக்கிறானுக பாருங்க .நாடு விளங்கும் .


GMM
ஜூலை 09, 2025 17:18

1991ல் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, நீதிபதிக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு அல்லது வழக்கு போட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி தேவை.? ஊழல் அல்ல. கணக்கில் வராத பணம். அரசு நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்க முடியாது. நீதிபதிகள், பொது ஊழியர்கள். ஆனால் ஜனாதிபதியின் ஊழியர்கள் அல்ல. எஜமானர் - -வேலைக்காரர் உறவும் அல்ல. பின் ஏன் ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்ய வேண்டும். அரசு சம்பளம் வழங்க வேண்டும். ஆணவம் புரிகிறது. 1947 முதல் 1991 வரை ஊழல் அமைச்சர்களால் யாரும் மன்றத்தை நெருங்க முடியவில்லை. ஊழலற்ற மத்திய அரசு என்றால் நிர்வாக, சட்ட விதிகள் தேடிப்பிடித்து நீதிமன்ற சுயாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


GMM
ஜூலை 09, 2025 17:11

நீதிபதி வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக யாரும் உரிமை கோராத 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட பின், ரிசர்வ் வங்கி அதிகாரி, நீதிமன்ற அதிகாரிக்கு தகவல் கொடுத்து, அறிக்கை அடிப்படையில் வருமான வரி துறை, அமுலாக்க துறை, சிபிஐ நீதிபதியை இணைக்காமல் குற்ற பத்திரிகை தயாரிக்க வேண்டும். பணி நேர ரெய்டுக்கு மட்டும் தான் தலைமை நீதிபதி அனுமதி தேவை. இம்பீச்மென்ட் இதற்கு பொருந்தாது? அதிகாரத்தை பயன்படுத்த பயப்படும் மத்திய அரசு மீது நீதிமன்ற எல்லையில் உள்ள கவர்னர் வழக்கு தொடர அனுமதிக்க முடியும்.


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 21:00

உமக்கு சட்ட ஞானம் ஜாஸ்தியிருக்கும் போல் தெரிகிறது. இதே கருத்தை கடிதம் வாயிலாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிவையுங்க. பதில் வரும்.


சமீபத்திய செய்தி