உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்ட விடுதி நடத்தியோர் கைது

சூதாட்ட விடுதி நடத்தியோர் கைது

மீரட்:உத்தர பிரதேசத்தில், அனுமதி இல்லாமல் சூதாட்டம் நடத்திய ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.உ.பி., மாநிலம் மீரட் நகரில் அனுமதி இன்றி, சூதாட்ட விடுதி நடத்தபப்டுவதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மீரட் நவுச்சந்தியில் உள்ள ஒரு ஹோட்டலில், எஸ்.பி., ஆயுஷ் விக்ரம் சிங் தலைமையில் போலீஸ் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு, அனுமதி இல்லாமலும், அதிக நுழைவுக் கட்டணத்துடன் சூதாட்ட விடுதி நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை